ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன் முதல் தமிழகத்தில் உயரும் சுங்க கட்டணம் வரை - டாப் 10 நியூஸ்
டாப் 10 தமிழ் நியூஸ்: உயரும் சுங்க கட்டணம், வானிலை அப்டேட், கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உள்ளிட்ட முக்கிய செய்திகளை இன்றைய டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

டாப் 10 தமிழ் நியூஸ் 25.03.2025: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தனிப்படை முன்பு வரும் 27ம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை சிபிசிஐடி தீவிரப்படுத்தியுள்ளது. கோடநாடு வழக்கில் இதுவரை 250 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை – பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்சென்னை – பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனைசெய்யப்படுகிறது . டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. WWW.CHENNAISUPERKINGS.COM என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை பெறலாம். இரு அணிகளும் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 28-ம் தேதி நடைபெறுகிறது.