TOP 10 NEWS: ’சட்டப்பேரவைக்கு வரும் ஆளுநர்! கச்சை கட்டும் எதிர்க்கட்சிகள்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’சட்டப்பேரவைக்கு வரும் ஆளுநர்! கச்சை கட்டும் எதிர்க்கட்சிகள்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’சட்டப்பேரவைக்கு வரும் ஆளுநர்! கச்சை கட்டும் எதிர்க்கட்சிகள்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Jan 06, 2025 09:33 AM IST

TOP 10 NEWS: ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடக்கம், அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள இன்று முதல் முன்பதிவு தொடக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

’சட்டப்பேரவைக்கு வரும் ஆளுநர்! கச்சை கட்டும் எதிர்க்கட்சிகள்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
’சட்டப்பேரவைக்கு வரும் ஆளுநர்! கச்சை கட்டும் எதிர்க்கட்சிகள்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

1.சட்டப்பேரவை இன்று தொடக்கம் 

இந்த ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை, ஃபெஞ்சல் புயல் நிவாரணம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்.  

2.அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டுப்பாடுகள்

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து உள்ளன. வளாகத்திற்குள் மாணவர்கள் மட்டுமே செல்ல வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நேரத்திற்கு பின்னர் தங்குவதற்கு அனுமதி இல்லை. உணவு டெலிவரி செய்யும் நபர்களுக்கு நுழைவாயில் வரை மட்டுமே அனுமதி உள்ளிட்ட விதிகள் அமல்.

3. அதிமுக மாணவரணியினர் கைது

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அண்ணா பல்கலைக்கழகம் முன் தடையை மீறி போராட்டம் நடத்திய அதிமுக மாணவரணியினர் கைது. 

4.பாஜக மாவட்ட தலைவருக்கு ஜாமீன் 

தனியார் மதுபான கூடத்திற்குள் நுழைந்து பணியாளரை மிரட்டிய வழக்கில் திண்டுக்கல் மேற்கு பாஜக மாவட்ட தலைவர் பழனி கனகராஜ் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் ஜாமீனில் விடுதலை. 

5.தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை 

வரும் ஜனவரி 11 மற்றும் 12ஆகிய தேதிகளில் 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

6.கண்ணாடி பாலத்தை பார்க்க மக்கள் ஆர்வம்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டலம் இடையே அமைந்த கண்ணாடி பாலத்தை 2 நாட்களில் மட்டும் 14,000 பேர் கண்டு ரசித்து உள்ளனர்.

7.செல்லப்பிராணிகள் விவகாரத்தில் தீர்ப்பு

அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் குடியிருப்போர் நலசங்கத்தினர், செல்லப்பிராணிகளுக்கு அபராதம் மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது சட்டவிரோதம் என சென்னை நகர சிவில் நீதிமன்றம் தீர்ப்பு. 

8.ஜல்லிக்கட்டு முன்பதிவு இன்று தொடக்கம் 

மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவர்கள் இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. 

9.ஈபிஎஸ் மீது டிடிவி தினகரன் விமர்சனம் 

பழனிசாமி திருந்துவார் என நம்பிக்கை இல்லை.. அதிமுகவை வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறார் என திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி.

10.இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கான பட்டியலை ஆட்சியர்கள் வெளியிடுகின்றனர்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.