TOP 10 NEWS: முன் கூட்டியே தொடங்கும் பருவமழை முதல் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: முன் கூட்டியே தொடங்கும் பருவமழை முதல் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: முன் கூட்டியே தொடங்கும் பருவமழை முதல் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Published Oct 05, 2024 08:01 PM IST

TOP 10 NEWS: முன்கூட்டியே தொடங்கும் பருவமழை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை, இலங்கை அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: முன் கூட்டியே தொடங்கும் பருவமழை முதல் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: முன் கூட்டியே தொடங்கும் பருவமழை முதல் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

1.வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை 

தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 15ஆம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும், நடப்பாண்டில் தென்னிந்தியாவில் இயல்பை விட கூடுதல் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

2.மிக கனமழை எச்சரிக்கை 

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. திண்டுக்கல், தேனி, சேலம், கரூர், மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பதூர், நாமக்கல், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

3.துணை முதலமைச்சர் ஆலோசனை 

பருவமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மின்பெட்டிகளை உயர்வான வைக்க வேண்டும். மீட்பு பணிகளூக்கு தன்னார்வலர்களை பயன்படுத்துவது குறித்து வாட்ஸ் அப் குழுக்களை அமைக்க வேண்டும் என வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.  

4.சென்னை மெட்ரோ குறித்து விளக்கம் 

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளுக்கான மதிப்பீடு செலவில் 65 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கும் என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது. நிதி உதவியில் 33,593 கோடி கடனும், சமபங்கு, சார்நிலை கடனான 7 ஆயிரத்து 425 கோடியும் அடங்கும். இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து 32 ஆயிரத்து 548 கோடி ரூபாய் கடனாக நிதி திரட்ட மத்திய அரசு நிதி உதவி செய்யும், எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டு செலவுக்கு மாநில அரசு நிதி உதவி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

5.சாம்சங் போராட்டம் குறித்து பேச்சு 

சாம்சங் விவகாரத்தில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் தலியிட்டு தீர்வுகாண வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தொழிலாளர் நலத்துறை நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் நாளை மறுநாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். 

6.விமானம் தரையிறக்கம் 

சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறை உரிய நேரத்தில் கண்டறிந்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி கூறிய நிலையில் விமானம் பாதுகாப்பாக சென்னையில் தரையிறக்கம். 

7.சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை 

சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை; பெரியவர், சிறியவர் என்று இல்லை. அனைவரும் ஒன்று என்பதே சனாதனம். இதை பற்றி தெரியாதவர்கள் சனாதனத்தை சாதியோடு தொடர்புபடுத்தி பேசி தவறான புரிதல்களை ஏற்படுத்துவதாக வள்ளலார் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு. 

8.மருத்துவர் ராமதாஸ் கண்டனம் 

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேருக்கு தலா 40 லட்சம் இலங்கை ரூபாய் வீதம் ரூ.1.60 கோடி அபராதமும், ஒரு மீனவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரங்களை முடக்கும் நோக்கத்துடன் இலங்கை அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் கருத்து. 

9.ஆசிரியர்களுக்கு பணி வழங்க தாமதமா?

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு 80 நாட்களாகியும் அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்காமல் பள்ளிக்கல்வித்துறை தாமதப்படுத்தி வருகிறது. பணி ஆணைகள் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. ஆசிரியர்களுக்கு பணி வழங்குவதில் அரசு காட்டும் தாமதம் கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து. 

10.நடிகை சோனா வீட்டில் கத்தியை காட்டி மிரட்டல் 

சென்னை மதுரவாயலில் நடிகை சோனா வீட்டில் சுவர் ஏறி குத்தித்து கத்தியை காட்டி மிரட்டிய லோகேஷ் மற்றும் சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.