TOP 10 NEWS: திமுக பவள விழா கூட்டம் முதல் தமிழக மீனவர்களை விடுவிக்க ராகுல் கடிதம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: திமுக பவள விழா பொதுக்கூட்டம், தமிழக மீனவர்களை விடுக்க கோரி ராகுல் காந்தி கடிதம், சென்னையில் சாலைகளை வெட்ட தடை, சொத்து வரி உயர்வுக்கு அதிமுக கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
1.திமுக பவள விழா பொதுக்கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உள்ள காஞ்சிபுரத்தில் நடைபெறும் திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் தி.க.தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு.
2. சொத்து வரி உயர்வுக்கு அதிமுக எதிர்ப்பு
மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு. வீட்டிற்கு வெள்ளையடிக்க கூட வழியின்றி வசிக்கும் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்க துடிக்கும் ஸ்டாலின் அரசின் கொடுமையால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். இந்த சொத்து வரி உயர்வால் சென்னை மாநகரம் முழுவதும் வாடகை கட்டணம் உயரும். இதனால் இளைஞர்கள், மாணவர்கள்ம் வேலை தேடுபவர்கள் பாதிக்கப்படுவார்கள். சொத்து வரியா? ,மக்கள் சொத்தை பறிக்க வரியா என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி.
3.சென்னையில் சாலைகளை வெட்ட தடை
சென்னையில் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி மறுஅறிவிப்பு வரும் வரை சென்னையில் சாலை வெட்டும் பணிகள் மேற்கொள்ள கூடாது. அவரச தேவைகளுக்கு சாலைகளை வெட்டும் பணி மேற்கொள்ள ஆணையர் ஒப்புதல் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
4.தவெக மாநாடு குறித்து ஆனந்த் பேட்டி
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டை வெற்றி மாநாட்டாக மாற்றித் தர வேண்டும். தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பாஸ் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம் என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேட்டி.
5.செந்தில் பாலாஜி விடுதலை ஆகவில்லை
செந்தில் பாலாஜி ஜாமீனில்தான் வந்து உள்ளார்; விடுதலை ஆகவில்லை. விடுதலை சிறூத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு ஒரு அரசியல் நாடகம்; குஜராத், பீகாரில் மதுவிலக்கு இருக்கும் போது அது ஏன் தமிழ்நாட்டில் முடியவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி.
6. தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
7.மீனவர்களை விடுவிக்க ராகுல் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். மயிலாடுதுறை எம்.பி சுதா எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
8. சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தால் ஆலையை சுற்றி உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.
9. அணுக்கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் 1144 ஏக்கர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தென் மாவட்டங்களில் அணு உலைகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கு அருகிலேயே அணுக்கனிம சுரங்கங்களை அமைக்க மத்திய அரசு துடிப்பதும், அதற்கு தமிழக அரசு ஓடோடிச் சென்று அனுமதி கொடுப்பதும் கண்டிக்கத்தக்கவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து.
10. பாப்பம்மாள் மறைவுக்கு மோடி இரங்கல்
பாப்பம்மாள் மறைவு மிகுந்த வேதனை அளிக்கின்றது. விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் அவர் முத்திரை பதித்து உள்ளார். பாம்மாளின் கனிவான இயம்புகளூக்காக் மக்கள் அவரை போற்றினர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் என பிரதமர் மோடி ட்வீட்