Weather Update : அக்னி வெயிக்கு இதமாக இன்று குளு குளு மழை பெய்ய வாய்ப்பு.. குட் நியூஸ் சொன்ன வானிலை!
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியதில் இருந்து முதல் 10 நாட்கள் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக அதன் கோரத் தாண்டவத்தை காட்ட தொடங்கி இருக்கிறது. 6-வது நாளாக நேற்றும் தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்தது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் சேலம் உள்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 107.24 டிகிரி வெயில் பதிவானது. சேலத்தில் அதிகபட்சமாக பகலில் 101.48 டிகிரி வெயில் அளவு பதிவானது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென கோடை மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. இதனால் இரவில் மழை பெய்த பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அனல் வெயிலுக்கு இதமாக கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்