தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Today Trending News Tamilnadu August 17

10 நாட்கள் பிரச்சாரம், ஆதார் எண் கட்டாயம் உள்பட முக்கிய செய்திகள் (ஆக 17)

Divya Sekar HT Tamil
Aug 17, 2022 05:09 PM IST

10 நாட்கள் பிரச்சாரம்,இனி ஆதார் எண் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளை சுருக்கமாக காண்போம்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

ட்ரெண்டிங் செய்திகள்

மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் சேவைகளை பெற இனி ஆதார் எண் கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஆட்டோவிற்கான கட்டணங்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஒ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தி.மு.க. அரசின் பயங்கரமான கபட நாடகத்தால், எங்களை வியக்க வைக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சந்தர்ப்பவாத அரசியல்வாதி கருணாநிதியின் மகன் தான் மு.க.ஸ்டாலின் என்பதும் எங்களுக்கு தெரியும் என தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

அத்திக்கடவு- அவினாசி திட்டப்பணிகள் குறித்து தமிழக முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும் என்று பாஜக விவசாய அணி வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். அளித்த தண்டனையாகவே பார்க்கிறேன் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. எதிர்காலத்தில் அதிமுக இ.பி.எஸ். தலைமையில் இயங்கும். அதற்கான முயற்சிகளை, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்த பாதுகாப்பு மற்றும் வெளியுறவு நிலைப்பாடுகளை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

அதிமுக உட்கட்சி பிரச்சனையில் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்