தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Today Trending News Tamilnadu August 13

கொசஸ்தலை தடுப்பணை, சிறுமிக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட முக்கிய செய்திகள் (ஆக 13)

Divya Sekar HT Tamil
Aug 13, 2022 04:59 PM IST

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எதிர்ப்பு,சாதாரண கட்டண பேருந்துகள் 100 விழுக்காடு இயக்கம் உட்பட பல்வேறு செய்திகள் சுருக்கமாக காண்போம்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகள் 100 விழுக்காடு இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விரைவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் திருவிழா நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற பழமையான கார்களின் கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

கோவை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சலவை தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கே.பி.பி. பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 1.6 கிலோ தங்கம், ரூ.14.9 லட்சம் பறிமுதல் செய்யப்படுகிறது.

சென்னையில் 19 இடங்களில் இன்று குடும்ப அட்டை குறைதீர்வு முகாம் நடைபெறுகிறது.

பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் தனியார் பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை வசூலிக்க தகுந்த நடவடிக்கையை திமுக அரசு எடுத்திட வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், இன்று முதல் பீப் பிரியாணி விற்பனை செய்யப்பட உள்ளது.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகள் 100% இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வீரமரணமடைந்த இராணுவ வீரர், தம்பி இலட்சுமணன் குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் அதிகரித்து ஒரு முட்டையின் கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக அதிகரித்துள்ளது.

முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்காக கொண்டுவரப்படும் திட்டங்கள் இலவசங்கள் கிடையாது எனவும், இலவசம் பற்றி கருத்து கூறுபவர்கள் பற்றி கவலையில்லை எனவும் முதல்வஸ்ர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேவையில்லாத ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

மதுரை அருகே திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திறமையான, நேர்மையான அதிகாரிகளை போதைப் பொருள் ஒழிப்பு பணிகளில் அமர்த்துதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தான் போதைப் பொருட்களை ஒழிக்க முடியும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்