Top 10 News: விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்

Top 10 News: விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்

Marimuthu M HT Tamil
Nov 10, 2024 02:55 PM IST

Top 10 News: விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு வரை.. இன்றைய டாப் 10 செய்திகள்

Top 10 News:  விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்
Top 10 News: விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசிய அவர், ''என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி'' எனத் தெரிவித்தார்.

தெலுங்கர்கள் குறித்து அவதூறாகப் பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகியுள்ளார். சென்னை எழும்பூர் போலீஸார் அளித்த சம்மனை வாங்க மறுத்து தப்பியோடியுள்ளார். ஏற்கனவே, அவர் மீது 4 பிரிவுகளின் எழும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதியப்பட்டது.

தூத்துக்குடியில் விபத்து:

தூத்துக்குடி ஏரல் ஆற்றுப்பாலம் அருகே மினிவேன் மீது பைக் மோதிய விபத்தில், பைக்கில் வந்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேரும் திருமண நிகழ்ச்சிக்காகச் சென்றபோது விபத்தில் சிக்கியதாகப் போலீஸில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை(நாளை 15 வரை) முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. மேலும், 5 நாட்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்குப் பருவமழை நவம்பர் 12ஆம் தேதி முதல் சூடுபிடிக்கும் என வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

திமுக ஒரு ஆன்மிக அரசு என்பதை மெய்ப்பித்து வருகிறது எனவும்; அனைத்து முகூர்த்த தேதிகளிலும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது என்றும்; குறிப்பாக பெரிய கோயில்கள் என்று இல்லாமல் சிறிய கோயில்களிலும் குடமுழுக்குகள் நடைபெறுவது சாதனை என தஞ்சாவூரில் தருமபுர ஆதினம் பேட்டியளித்துள்ளார்.

கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற நாகர்கோவிலை சேர்ந்த வள்ளி என்பவர், அரசுப் பேருந்தில் தவறவிட்ட பையைக் கண்டறிந்து அவரிடம் பத்திரமாக ஒப்படைத்த போக்குவரத்துக் கழக ஊழியர் மனோகரனின் செயலுக்கும் அவரது நேர்மைக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் எதிரே ரூ.1 கோடி செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. மேலும், கோபுரத்தின் அடிப்பாகம் சுமார் 6 அடி பூமிக்குள் புதைந்த நிலையில் தொன்மையான சிற்பங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலை அமைத்து வருகின்றனர்.

விருதுநகருக்கு பல்வேறு திட்டங்கள்:

விருதுநகரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை ஆட்சியர் நாற்காலியில் முதலமைச்சர் அமரவைத்தார். அதன்பின், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ரூ.350 கோடி செலவில் சிப்காட் அமைக்கப்படும் என்றும்; விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகள் ரூ. 41 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும், காளிங்கபேரி, வெம்பக்கோட்டை அணைகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், சிவகாசியில் ரூ. 15 கோடி செலவில், நவீன கூட்டரங்கம் அமைக்கப்படும் என்றும், விருதுநகரில் ரூ.25 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும், பட்டாசு தொழிலாளர்கள் உயிரிழந்தால் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிமுக - தேமுதிக கூட்டணி நட்புணர்வோடு தொடர்கிறது என்றும், 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.