LIVE UPDATES
Tamilnadu News Live January 9, 2025: DK Shivakumar : தமிழ்நாட்டுக்கு உதவியாகத்தான் மேகதாது அணை திட்டம் இருக்கும் - டி.கே. சிவக்குமார் உறுதி
தமிழ்நாடு செய்திகள் January 9, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Thu, 09 Jan 202504:22 PM IST
Tamil Nadu News Live: DK Shivakumar : தமிழ்நாட்டுக்கு உதவியாகத்தான் மேகதாது அணை திட்டம் இருக்கும் - டி.கே. சிவக்குமார் உறுதி
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருக்கும் மாநில கட்சிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையாகவே இதை பார்க்கிறேன். தற்போது இருக்கும் நிலையே இருக்க வேண்டும் என டி.கே சிவக்குமார் தெரிவித்தார்.
Thu, 09 Jan 202501:02 PM IST
Tamil Nadu News Live: Sivasankar vs EPS: யார் அந்த சார்?.. "இபிஎஸ் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது" - அமைச்சர் சிவசங்கர் காட்டம்!
- Sivasankar vs EPS: பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது என்றும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச்செயலாளர் நடத்தும் கபட நாடகம் இனி மக்களிடம் எடுபடாது என்றும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Thu, 09 Jan 202512:15 PM IST
Tamil Nadu News Live: TN Assembly: சரமாரியாக கேள்வி எழுப்பிய எம்எல்ஏக்கள்.. அசால்டாக பதிலளித்த அமைச்சர்கள்.. பேரவையில் இன்று நடந்தது என்ன?
- Tamilnadu Assembly Session 2025: நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நான்காம் நாள் கூட்டத்தில், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து பேசியது குறித்தும் சட்டப்பேரவையில் இன்று நடந்தவைகள் குறித்தும் சுருக்கமாக விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Thu, 09 Jan 202511:00 AM IST
Tamil Nadu News Live: Pongal Gift, Duraimurugan: பொங்கல் பரிசுத்தொகை.. தேர்தல் வரும் போது பார்க்கலாம்.. உண்மையை சொன்ன துரைமுருகன்!
- தேர்தல் வரும்போது பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது குறித்து பார்த்துக்கொள்ளலாம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
Thu, 09 Jan 202510:12 AM IST
Tamil Nadu News Live: Annamalai, Seeman: பெரியார் குறித்து சர்ச்சை.. “சீமான் அண்ணனுக்கு ஆதரவாக ஆதாரங்களை நான் தருகிறேன்”.. அண்ணாமலை அறிவிப்பு!
- Annamalai Support to Seeman: பெரியார் பேசியதற்கான ஆதாரங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக நான் வெளியிடுவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Thu, 09 Jan 202508:56 AM IST
Tamil Nadu News Live: Seeman vs Periyar: "தமிழன் என்றால் யார்?.. பெரியாரை எதிர்ப்பது தான் என் கொள்கை".. சீமான் காட்டமான பேச்சு!
- பெரியாரின் பெண்ணிய உரிமை, பகுத்தறிவு, சமூகநீதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
Thu, 09 Jan 202507:52 AM IST
Tamil Nadu News Live: MK Stalin, UGC: "வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது.. சட்டப்பேரவையில் அனல் பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்
- MK Stalin, UGC: யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Thu, 09 Jan 202506:53 AM IST
Tamil Nadu News Live: EPS: தமிழ்நாடு சட்டமன்றம், திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல.. எதிர்க்கட்சி வரிசை அச்சுறுத்துகிறதா? - இபிஎஸ் சரமாரி கேள்வி!
- EPS: "தமிழ்நாடு சட்டமன்றம், பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை; திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல." - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
Thu, 09 Jan 202506:17 AM IST
Tamil Nadu News Live: Tamilnadu Assembly 2025: 'தயவு செய்து அண்ணா'.. நேரடியாக கேட்ட வேல்முருகன்.. பங்கமாக கலாய்த்த அமைச்சர் துரைமுருகன்!
- Tamilnadu Assembly 2025: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தனது தொகுதி தொடர்பாக கோரிக்கை வைத்து பேசியோது, அமைச்சர் துரைமுருகன் பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
Thu, 09 Jan 202506:12 AM IST
Tamil Nadu News Live: AIADMK Symbol : ‘இரட்டை இலை தொடர்பான முடிவுக்குத் தடை’ இபிஎஸ் மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு!
- AIADMK Symbol : நீதிமன்ற வழக்கு விசாரணையில் இருக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் நடத்துவதைத் தடுக்கக் கோரி அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இல் ரிட் மனுக்களை தாக்கல் செய்தார
Thu, 09 Jan 202505:30 AM IST
Tamil Nadu News Live: ‘மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்.. 4 பேர் பலி.. 30 பேர் காயம்’ ராணிப்பேட்டை அருகே பயங்கரம்!
- மேலும் விபத்தில் சிக்கிய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்து நடந்த இடத்தில் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Thu, 09 Jan 202505:13 AM IST
Tamil Nadu News Live: Tamilnadu Assembly 2025: பரபரப்பான சூழலில் தொடங்கிய சட்டப்பேரவை.. நேரலையில் காட்டப்படாத அதிமுக எம்எல்ஏக்கள்!
- Tamilnadu Assembly 2025: தமிழக சட்டப்பேரவையின் நான்காம் நாள் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கி இருக்கிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்தபடி இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Thu, 09 Jan 202504:23 AM IST
Tamil Nadu News Live: Top 10 News: சுத்து போட்ட IT அதிகாரிகள்.. பொங்கல் பரிசுத் தொகுப்பு.. ஆம்னி பஸ் கட்டண உயர்வு - இன்றைய டாப் 10 நியூஸ்!
- Top 10 News: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்பான செய்திகள் உள்பட டாப் 10 முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
Thu, 09 Jan 202503:59 AM IST
Tamil Nadu News Live: ‘அரசு நிறுவனமா? அரசியல் நிறுவனமா?’ காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி!
- ‘நவம்பர் 6-ம் தேதி போலீசார் நிராகரிப்பு உத்தரவு பிறப்பித்ததாகவும், அதன் நகல் நவம்பர் 7-ம் தேதி சென்னையில் உள்ள கட்சி அலுவலக சுவரில் ஒட்டப்பட்டிருந்ததாகவும், ஏற்கெனவே நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பயணம், உணவு, தங்குமிட வசதிகள் என கணிசமான தொகையை செலவழித்து சென்னையில் குவிந்திருந்தனர்’
Thu, 09 Jan 202503:28 AM IST
Tamil Nadu News Live: Tirupati Tragedy: திருப்பதி தேவஸ்தானத்தின் அலட்சியம்.. பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
- Tirupati Tragedy: திருப்பதி தேவஸ்தானத்தின் அலட்சியத்தால் திருமலையில் வரலாறு காணாத விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததும், அரசுத் துறைகளின் அலட்சியம் ஆறு பக்தர்களின் உயிரைப் பறித்துள்ளது. இதுவரை ஆறு பேர் உயிர் இழந்துள்ளனர், மேலும் இறப்பு எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.
Thu, 09 Jan 202502:54 AM IST
Tamil Nadu News Live: Chennai Weather : ஜனவரி 9 சென்னை எப்படி இருக்கும்? மழையா? பனியா? வெயிலா? முழுத் தகவல் இதோ!
Chennai Weather : இன்றைய வானிலை முன்னறிவிப்பு: வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று காலை 63% சார்பு ஈரப்பதம் பதிவாகியுள்ளது. மேலும் கூடுதல் விபரம் இதோ.