LIVE UPDATES
Tamilnadu News Live January 7, 2025: ‘ஈபிஎஸை கோழை என்று சொன்னால் குப்புறப்படுத்து அழுவார்!’ அமைச்சர் ரகுபதி கிண்டல்!
தமிழ்நாடு செய்திகள் January 7, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tue, 07 Jan 202512:25 PM IST
Tamil Nadu News Live: ‘ஈபிஎஸை கோழை என்று சொன்னால் குப்புறப்படுத்து அழுவார்!’ அமைச்சர் ரகுபதி கிண்டல்!
- ”தமிழ்நாட்டு நலனுக்காக எந்த குரலும் கொடுக்காமல் தனது அரசியல் ஆதாயத்தை மட்டுமே முதன்மையாக கொண்டு பாஜக வோடு கள்ளக் கூட்டணி வைத்து செயல்பட்டு வரும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்”
Tue, 07 Jan 202510:04 AM IST
Tamil Nadu News Live: Madurai Rally: மதுரையை கதறவிட்ட டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி! திக்கி திகைக்கும் போலீஸ்!
- ஆயிரக்கணக்கான காவல்துறையின் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
Tue, 07 Jan 202509:17 AM IST
Tamil Nadu News Live: Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
- Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
Tue, 07 Jan 202508:54 AM IST
Tamil Nadu News Live: EVKS Elangovan: சாவதற்கு முன் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னிடம் சொன்னது என்ன? போட்டு உடைத்த முதல்வர்!
- என்னை எப்போது சந்திக்க வந்தாலும் ’உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது’ என்றுதான் கேட்பார். நானும் திரும்ப அவரிடத்தில் அதை தான் கேட்பேன். ”நீங்கள் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்”-என்றுதான் சொல்வேன்.
Tue, 07 Jan 202508:17 AM IST
Tamil Nadu News Live: IT Raid: குறி வைக்கப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? உறவினர் வீடுகளில் ஐடி ரெய்டு!
- ஈரோடு மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள என். ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Tue, 07 Jan 202507:16 AM IST
Tamil Nadu News Live: ’உளறும் ஸ்டாலின்! கதறும் துரைமுருகன்! யார் அந்த சார்?’ திமுக போஸ்டருக்கு பதிலடியாக அதிமுக வெளியிட்ட கார்ட்டூன் வீடியோ!
- ஆளுநர் விவகாரத்தில் திமுக வெளியிட்ட போஸ்டருக்கு பதிலடியாக அதிமுக சார்பில் கார்ட்டூன் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது!
Tue, 07 Jan 202506:25 AM IST
Tamil Nadu News Live: திமுக போராட்டத்திற்கு மட்டும் அனுமதி தருவது எப்படி? போலீஸ்க்கு எதிராக பாமக முறையீடு! அவசர வழக்காக நாளை விசாரணை!
- மாநகர காவல் சட்ட விதிகளை பின்பற்றாமல் திமுக போராட்டம் நடத்த காவல்துறை ஒரே நாளில் அனுமதி வழங்கியதை எதிர்த்து நீதிபதி வேல்முருகன் அமர்வில் பாமக வழக்கறிஞர் பாலு முறையீடு செய்தார். இதனை பரிசீலனை செய்த நீதிபதி அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
Tue, 07 Jan 202505:27 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: 4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்! சவரன் எவ்வுளவு தெரியுமா?
- Gold Rate Today: கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் விலை மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.
Tue, 07 Jan 202505:12 AM IST
Tamil Nadu News Live: Erode East By-Election: ஈரோடு கிழக்கில் இடைத் தேர்தல் எப்போது? தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
- Erode East By-Election: தமிழ்நாடு சட்டப்பேரவை தொடர் ஆளுநர் உரைக்காக நேற்று தொங்கி உள்ளது. இரண்டாம் நாளான இன்று மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாள் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
Tue, 07 Jan 202504:13 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’யார் அந்த சார்?’ பேட்ஜ் உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள்! ஆளுநரை கண்டித்து திமுக போஸ்டர்!’ டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: சட்டப்பேரவையில் 'யார் அந்த சார்?’ பேட்ஜ் உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை, ஆளுநரை கண்டித்து திமுக போஸ்டர், ஆளுநர் மீது சீமான் விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Tue, 07 Jan 202502:58 AM IST
Tamil Nadu News Live: ‘தமிழகத்தில் குறைந்தது குழந்தைகள் பிறப்பு விகிதம்..’ 2019க்குப் பின் தொடர் சரிவு!
- வடமாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தென் மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்திருக்கிறது.