LIVE UPDATES
Tamilnadu News Live January 6, 2025: ’வந்த வேகத்தில் ஆளுநர் நடையை கட்டியது ஏன்?’ சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ராஜ்பவன் விளக்கம்!
தமிழ்நாடு செய்திகள் January 6, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Mon, 06 Jan 202509:46 AM IST
Tamil Nadu News Live: ’வந்த வேகத்தில் ஆளுநர் நடையை கட்டியது ஏன்?’ சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ராஜ்பவன் விளக்கம்!
- ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடாமல் இருப்பது அல்லது இசைக்காமல் இருப்பது அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். இதனால் அதிர்ச்சியடைந்த ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறினார் என ராஜ்பவன் தெரிவித்து உள்ளது
Mon, 06 Jan 202509:21 AM IST
Tamil Nadu News Live: இது நல்லதல்ல! ஆளுநரையும், ஆளும் திமுக அரசையும் போட்டு விளாசிய விஜய்! பரபரப்பு ட்வீட்!
- ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
Mon, 06 Jan 202508:43 AM IST
Tamil Nadu News Live: ’ஆளுநர் உரையை நேரலை செய்யாதது ஏன்?’ செய்தியாளர் கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு வினோத விளக்கம்!
- ஆளுநர் பதவிக்காலம் நிறைவடைந்த பின் அந்த பதவியை தொடர்கிறாரே? என்ற கேள்விக்கு, அதை நீங்கள் ஐயாவிடம்தான் கேட்க வேண்டும். அவர்கள் விரும்பு உட்கார்ந்து இருக்கிறார் என தெரிவித்தார்.
Mon, 06 Jan 202507:34 AM IST
Tamil Nadu News Live: சட்டப்பேரவையில் திமுகவின் ஏஜெண்ட்டாக செயல்பட்டாரா ஆளுநர்? சந்தேகம் கிளப்பும் அன்புமணி!
- விவாதிக்கப்படுவதற்கும், செயல்படுத்தப்படுவதற்கும் ஏராளமான விவகாரங்கள் உள்ளன. அவற்றை விடுத்து, கவனத்தை திசைதிருப்பும் வகையிலான எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவை தவிர்த்திருக்கப்பட வேண்டும் என அன்புமணி கருத்து
Mon, 06 Jan 202506:52 AM IST
Tamil Nadu News Live: தேசபக்தியில் தமிழர்கள் சளைத்தவர்களா? மன்னிப்பு கேளுங்க! ஆளுநரை விளாசும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!
- ஏதோ தேசபக்திக்கு ஒட்டுமொத்த குத்தகை அவர்தான் என்பதுபோல அவர் பேசுகிறார். தேசபக்தியில் தமிழ்நாட்டு மக்களை விஞ்சி அவர் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. தேசத்திற்காக தன்னுயிரை தமிழ்நாட்டில் இருந்து பலரும் அர்ப்பணித்து உள்ளார்கள்.
Mon, 06 Jan 202506:20 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: மீண்டும் ஸ்டக் ஆகி நின்ற தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?
- Gold Rate Today: வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலையே தொடர்கிறது!
Mon, 06 Jan 202505:59 AM IST
Tamil Nadu News Live: வெளியேறிய ஆளுநர்! தனது பாணியில் பதிலடி தந்த துரைமுருகன்!
- இந்த நாட்டின் மீதும், தேசிய கீதத்தின் மீதும் பெரும் மதிப்பை தமிழ்நாட்டு மக்களும், இந்த பேரவையும் என்றென்றும் கொண்டு உள்ளார்கள். தேசிய ஒருமைப்பாடு, நாட்டுப்பற்றில் தேசிய தலைவர்கள் மீது மாறாத நன்மதிப்பை இந்த அரசு கொண்டு உள்ளது.
Mon, 06 Jan 202505:30 AM IST
Tamil Nadu News Live: Anna University issue: சிறுமி முதல் பாட்டி வரை! ஒருத்தர விடல! இதுவேற உள்ள நடந்து இருக்கா? ஈபிஎஸ் சொன்ன திகில் சம்பவம்!
- Anna University issue: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற இந்த அரசு முயற்சி செய்கிறது என்பதுதான் மக்களின் சந்தேகமாக உள்ளது.
Mon, 06 Jan 202504:51 AM IST
Tamil Nadu News Live: BJP: ’யார் அந்த சார்?’ என்ற பெயரில் ஒரு படமே எடுக்கலாம்! பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் விளாசல்!
- ஆளுநர் உரையை படிக்கவிடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த உடனேயே, தேசிய கீதம் இசைத்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாகவே எல்லோரும் ஆளுநரை முற்றுகையிட்டனர். அதனால் ஆளுநர் வெளியே வந்துவிட்டார் என நயினார் நாகேந்திரன் பேட்டி
Mon, 06 Jan 202504:25 AM IST
Tamil Nadu News Live: RN Ravi : தேசிய கீதம் மறுப்பு : ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறினார் ஆர்.என்.ரவி!
- இதைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை, சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகவினர் குண்டுகட்டாக அங்கிருந்து அப்பறப்படுத்தப்பட்டனர்
Mon, 06 Jan 202504:15 AM IST
Tamil Nadu News Live: திமுக அரசுக்கு அடுத்த அதிர்ச்சி! உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றார் ஆளுநர்! சட்டப்பேரவையில் குழப்பம்!
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்ற வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Mon, 06 Jan 202504:03 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’சட்டப்பேரவைக்கு வரும் ஆளுநர்! கச்சை கட்டும் எதிர்க்கட்சிகள்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடக்கம், அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள இன்று முதல் முன்பதிவு தொடக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!