LIVE UPDATES
Tamilnadu News Live January 5, 2025: ‘திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லை’ புதிய செயலாளர் பெ.சண்முகம் பேட்டி!
தமிழ்நாடு செய்திகள் January 5, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Sun, 05 Jan 202512:57 PM IST
Tamil Nadu News Live: ‘திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லை’ புதிய செயலாளர் பெ.சண்முகம் பேட்டி!
- எங்கள் பேரணிக்கு அனுமதி மறுத்ததால் தான், அன்று காவல் துறையின் இந்த அணுகுமுறைக்கு தோழர் பாலகிருஷ்ணன் அவ்வாறு பேசினார். இதை திமுக தலைமை புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.
Sun, 05 Jan 202511:59 AM IST
Tamil Nadu News Live: எனக்கு தலைவர் பதவி வேண்டாம்! ரிலீவ் பண்ணுங்க! பாஜக வழியில் கே.பாலகிருஷ்ணன்!
- “கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் எந்தவிதமான பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது” அடுத்த மாதம் 72 வயது ஆவதை ஒட்டி, தன்னை பொறுப்புகளில் இருந்து விடுவிக்க கட்சியின் மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்து உள்ளார்.
Sun, 05 Jan 202511:45 AM IST
Tamil Nadu News Live: ’15 லட்சம் பேர் வந்தாங்க! ஒத்த ரூபா தரல! இதுதான் முதல் வெற்றி மாநாடு!’ பொங்கி எழுந்த புஸ்ஸி ஆனந்த்!
- இந்த மாநாடு மிக சிறப்பான மாநாடக இருந்தது. தளபதி அழைக்கிறார் என்று சொல்லி, ஒரு அழைப்பிதழ் கூட அடிக்கவில்லை. மாநாடு குறித்து தோழர்களுக்கும், பொதுமக்களும் விஜய் சொன்னார். அதற்கு 15 லட்சம் பேர் கூடினார்கள். 15 லட்சம் பேர் கூடுவதற்கு ஒரு ஒத்த ரூபாயை கூட நாங்கள் செலவு செய்யவில்லை.
Sun, 05 Jan 202510:12 AM IST
Tamil Nadu News Live: ’முரசொலி எங்களை சாடி எழுதவில்லை!’ முத்தரசன் வினோத விளக்கம்! திமுக கூட்டணி தொடரும் என அறிவிப்பு!
- திமுகவுக்கும் மார்க்ஸ்ட் , விசிக, சிபிஐ கட்சிகள் இடையே முரண்பாடு உள்ளது போல் தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி உறுதியான கூட்டணி. இந்த கூட்டணிதான் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறும்.
Sun, 05 Jan 202509:38 AM IST
Tamil Nadu News Live: முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டாவுக்கு அனுமதி மறுப்பு! கருப்பு நிறத்தை பார்த்து பயப்படுகிறாரா ஸ்டாலின்?
- “கருப்பு கலர் துப்பட்டாவை, கருப்பு கொடி என்று நினைக்கிறார்களோ என்னவோ! கருப்பை பார்த்து ஸ்டாலினும் பயப்பட ஆரம்பித்துவிட்டாரா? என தமிழிசை சவுந்தராஜன் விமர்சனம்!”
Sun, 05 Jan 202509:13 AM IST
Tamil Nadu News Live: ‘புத்தக காட்சியில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை!’ பேச்சை கேட்காத சீமான்! வருத்தம் தெரிவித்த புத்தக நிறுவனம்!
- பாரதிதாசன் பாடல் என்பதால் நானும் அதை இயல்பாக எடுத்துக்கொண்டேன். அது பாண்டிச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து என்றோ. இதன்மூலம் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுகிறது என்ற அரசியல் தெளிவோ அப்போது இல்லாதது எனது அறியாமையே. அதற்காக நான் வருந்துகிறேன்.
Sun, 05 Jan 202508:36 AM IST
Tamil Nadu News Live: '80 வயசு கிழவியை கூட விடல! குஷ்புவை ஆட்டு மந்தையில் அடைப்பதா? கொதிக்கும்!' செல்லூர் ராஜூ
- நேற்றுக் கூட 80 வயசு பாட்டியை வன்முறை செய்ததாக பத்திரிக்கையில் வந்தது. 5 வயது முதலே விடவில்லை. இதில் திமுகவினரே அதிகம் பங்கேற்று உள்ளனர். இந்த வழக்குகளை சரியாக விசாரிக்கவில்லை.
Sun, 05 Jan 202507:53 AM IST
Tamil Nadu News Live: 2025ம் ஆண்டில் TNPSC மூலம் தேர்வு செய்ய உள்ள ஊழியர்கள் எண்ணிக்கை எவ்வளவு? அரசை விளாசும் அன்புமணி!
- ஒவ்வொரு ஆண்டும் 15-க்கும் கூடுதலான போட்டித்தேர்வுகள் அறிவிக்கப் பட்டு நடத்தப்படுவது வழக்கம் ஆகும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2023-ஆம் ஆண்டில் இது 12 ஆக குறைந்தது, 2024-ஆம் ஆண்டில் இது 8 ஆக சரிந்தது. நடப்பாண்டில் வெறும் 7 போட்டித்தேர்வுகள் மட்டுமே நடத்தப்படவுள்ளன.
Sun, 05 Jan 202506:26 AM IST
Tamil Nadu News Live: ’இந்த கேள்விக்கு பதில் சொன்னால் ஒரு மில்லியன் டாலர் பரிசு!’ முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த அதிரடி அறிவிப்பு!
- சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு கருத்தரங்கு தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
Sun, 05 Jan 202506:05 AM IST
Tamil Nadu News Live: மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!
- விழுப்புரத்தில் நடந்த அக்கட்சியின் மாநாட்டில் அவர் கலந்து கொண்ட போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.
Sun, 05 Jan 202505:52 AM IST
Tamil Nadu News Live: நூதன போராட்டம் நடத்தி வாங்கி கட்டிக்கொண்ட ஏபிவிபி நிர்வாகிகள்! ஒரு மாதம் அவசர சிகிச்சை பிரிவில் இருக்க உத்தரவு!
- அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக அரசை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க கோரி ஏபிவிபி நிர்வாகிகள் போராட்டம் நடத்தி இருந்தனர்.
Sun, 05 Jan 202505:07 AM IST
Tamil Nadu News Live: ’புது பைக் வாங்க போறீங்களா? உஷார்! விபூதி அடிக்கும் பைக் ஷோரூம்கள்!’ அம்பலமான தில்லுமுல்லு!
- யாத்தேஷ் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி அன்று இருசக்கர வாகனம் வாங்க வந்து உள்ளார். அவர் வாங்கிய இருசக்கர வாகனம் தொடர்ந்து பழுதன நிலையில், இது தொடர்பாக விசாரித்ததில், தனக்கு கொடுக்கப்பட்ட இருசக்கர வாகனம் டெஸ்ட் ட்ரைவுக்காக பயன்படுத்ப்படும் டெமோ பைக் என்பது தெரிய வந்துள்ளது.
Sun, 05 Jan 202504:07 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: டெல்லி பறந்தார் துரைமுருகன்! கே.பாலகிருஷ்ணனுக்கு திமுக பதிலடி! இன்றைய டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு டெல்லி சென்ற துரைமுருகன், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு திமுக பதில், மதுரை எம்.பி. மருத்துவமனையில் அனுமதி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Sun, 05 Jan 202503:30 AM IST
Tamil Nadu News Live: இரவில் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்.. காலையில் அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு!
வேலூர் மாவட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் வெள்ளிக்கிழமை 11 மணி நேர சோதனை நடத்தினர்.
Sun, 05 Jan 202503:06 AM IST
Tamil Nadu News Live: ‘இதில் எது ஒரிஜினல் கே.பி.? தன் நெஞ்சே தன்னைச் சுடாதா?’ மார்க்சிஸ்ட் கம்யூ., மீது பாய்ந்த முரசொலி!
- ‘உரிய வகையில் அனைத்துக்கும் பதிலளித்தும் செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை எப்போதும் சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற நெருக்கடியும் நிர்பந்தமும் கே.பி.க்கு இருக்கலாம்’
Sun, 05 Jan 202501:34 AM IST
Tamil Nadu News Live: தேசிய அரசியலில் திமுகவின் முகம்.. பிறந்தநாள் காணும் திராவிடப் புதல்வி கனிமொழி கருணாநிதியின் அரசியல் பயணம்..!
- திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்பியுமான கனிமொழி கருணாநிதி இன்று (ஜனவரி 05) தனது 57-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்கள் பலரும் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவி்தது வருகின்றனர்.