LIVE UPDATES
Tamilnadu News Live January 4, 2025: Tasmac Bar : மீண்டும் தலை தூக்குகிறதா ‘கரூர் கேங்க்’.. அமைச்சரின் ஆதரவாளர் ஆபிஸை முற்றுகையிட்ட பார் உரிமையாளர்கள்!
தமிழ்நாடு செய்திகள் January 4, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Sat, 04 Jan 202512:08 PM IST
Tamil Nadu News Live: Tasmac Bar : மீண்டும் தலை தூக்குகிறதா ‘கரூர் கேங்க்’.. அமைச்சரின் ஆதரவாளர் ஆபிஸை முற்றுகையிட்ட பார் உரிமையாளர்கள்!
- போலீசாரிடம், தங்கள் ஆதங்கத்தை பார் உரிமையாளர்கள் கொட்டித் தீர்த்தனர். ‘ஓரளவுக்கு தான் சார் பணம் தர முடியும்? எவ்வளவு தான் சார் தர்றது’ போன்ற வார்த்தைகளை அவர்கள் போலீசாரிடம் பயன்படுத்தினர்
Sat, 04 Jan 202511:42 AM IST
Tamil Nadu News Live: பாஜகவின் ரேடாரில் நாடார் சமூகம்! மத்திய அமைச்சர் ஆகும் தமிழிசை? அண்ணாமலையின் கதி என்ன?
- தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலில் உயர்ந்து உள்ள நிலையில், நாடார் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளன.
Sat, 04 Jan 202511:41 AM IST
Tamil Nadu News Live: Pongal Holiday : பொங்கல் பண்டிகை விடுமுறை அறிவிப்பு.. எத்தனை நாட்கள்.. யாருக்கெல்லாம் தெரியுமா?
- ‘17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை’
Sat, 04 Jan 202510:41 AM IST
Tamil Nadu News Live: திமுகவுக்கு எதிராக மீசையை முறுக்கும் திருமா! அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பேரவையில் விவாதிக்க விசிக நோட்டீஸ்!
- தமிழ்நாட்டை உலுக்கி உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் வேங்கைவயலில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என விசிக சார்பில் சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான கடிதம் தரப்பட்டு உள்ளது.
Sat, 04 Jan 202509:56 AM IST
Tamil Nadu News Live: ’முடிவுக்கு வருகிறதா அண்ணாமலையின் ஆட்டம்! பாஜகவின் புதிய மாநிலத் தலைவர் யார்?' டெல்லி தலைமையில் பலே ஸ்கெட்ச்!
- அதிமுகவில் இருந்து வந்த பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் அல்லது பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை தலைவராக நியமிக்க தேசியத் தலைமை ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
Sat, 04 Jan 202508:42 AM IST
Tamil Nadu News Live: ’விக்கிரவாண்டியில் அமைச்சர் பொன்முடி தந்த 3 லட்சம்! தூக்கி எறிந்த குழந்தையின் தாய்!'
- சிறுமி இறந்ததை சொல்லாமல் பள்ளி நிர்வாகம் மூடி மறைத்ததாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.
Sat, 04 Jan 202508:14 AM IST
Tamil Nadu News Live: DMK vs CPM: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையா? ஸ்டாலினை சாடும் கே.பாலகிருஷ்ணன்! பதிலடி தந்த சேகர்பாபு!
- திமுக அரசு, தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகளை பறிக்கும்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாத போது திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்போம் என கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!
Sat, 04 Jan 202508:06 AM IST
Tamil Nadu News Live: மாணவி சொன்ன யார் அந்த சார்! ஞானசேகரனை காவலில் எடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!
- இதனை தொடர்ந்து ஞான சேகரன் எத்தனை பெண்களிடம் இதுபோல் செயல்பட்டு இருக்கிறார் என்பதையும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த உள்ளது.
Sat, 04 Jan 202507:51 AM IST
Tamil Nadu News Live: ‘சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசினார்’ சிறப்பு புலனாய்வு குழுவிடம் பாதிக்கப்பட்ட மாணவி ஒப்புதல் வாக்குமூலம்!
- ‘சென்னை காவல் ஆணையாளர் அருண் மற்றும் திமுகவினர், ஞானசேகரனை தவிர வேறு யாரும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்று கூறிவந்தனர். இந்த நிலையில் தான்’
Sat, 04 Jan 202507:15 AM IST
Tamil Nadu News Live: ’அண்ணா பல்கலைக்கழக சம்பவம் வெட்கித் தலைகுனியக் கூடிய ஒன்று!’ திமுக எம்பி கனிமொழி வேதனை!
- இந்த சம்பவம் சமூகமே வெட்கித் தலைகுணிய கூடிய ஒன்றுதான். தொடர்ந்து உலகம் முழுவதும் பல இடங்களில் நடந்து வருகின்றது. பொள்ளாச்சியில் நடந்து போல் நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளை பாதுக்க வேண்டிய நிலை இங்கு இல்லை என தெரிவித்தார்.
Sat, 04 Jan 202506:01 AM IST
Tamil Nadu News Live: ’சாட்டையால் அடிக்கும் டெக்னிக்கை அண்ணாமலைக்கு முன்பே யோசித்து நான் விட்டேன்!’ கூல் சுரேஷ் ஆவேச பேட்டி!
- அண்ணாமலை சார், தமிழ்நாட்டுக்காக போராடி வருகிறார். கூல் சுரேஷ் தமிழ் சினிமாவுக்காக போராடி வருகிறேன் என நடிகர் கூல் சுரேஷ் கூறி உள்ளார்.
Sat, 04 Jan 202505:19 AM IST
Tamil Nadu News Live: ‘2000.. 5000.. 10000.. இல்ல பூஜ்ஜியமா? இப்போ அரசியலா அவியலா?’ ஆர்.பி.உதயக்குமார் காட்டம்!
- ‘எடப்பாடி பழனிசாமி அரசு 2500 பொங்கல் பரிசு வழங்கிய போது ,அப்போது 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசியல் செய்த ஸ்டாலின், இன்றைக்கு அவியல் செய்கிறாரா? அரசியல் செய்கிறாரா?’
Sat, 04 Jan 202505:08 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: ஆண்டின் தொடங்கத்தில் முதல் முறையாக சரிந்த தங்கம்! சவரன் எவ்வளவு தெரியுமா?
- Gold Rate Today: தொடர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Sat, 04 Jan 202504:26 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ஸ்டாலினை விளாசும் கம்யூனிஸ்ட் கட்சி! தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மோதல்! டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மோதல், முதலமைச்சர் ஸ்டாலின் மீது கே.பாலகிருஷ்ணன் விமர்சனம், சிதம்பரம் கோயிலில் கொடியேற்றம், கேஸ் டேங்கர் லாரி டிரைவர் கைது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!