LIVE UPDATES

ADMK VS DMK: ’பாஜக, காங்கிரஸ் உடன் முதுகு வளைந்து சேவை செய்ததை முதலமைச்சர் மறந்துவிட வேண்டாம்!’ ஜெயக்குமார்
Tamilnadu News Live January 25, 2025: ADMK VS DMK: ’பாஜக, காங்கிரஸ் உடன் முதுகு வளைந்து சேவை செய்ததை முதலமைச்சர் மறந்துவிட வேண்டாம்!’ ஜெயக்குமார்
தமிழ்நாடு செய்திகள் January 25, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Sat, 25 Jan 202511:53 AM IST
Tamil Nadu News Live: ADMK VS DMK: ’பாஜக, காங்கிரஸ் உடன் முதுகு வளைந்து சேவை செய்ததை முதலமைச்சர் மறந்துவிட வேண்டாம்!’ ஜெயக்குமார்
- அதே நாள், அறிவாலயத்தின் மேல்தளத்தில் CBI விசாரணை, கீழ் தளத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர்கள் கேட்ட தொகுதிகளையும், கேட்ட இடங்களையும் கண்ணை மூடிக்கொண்டு வழங்கி, கூட்டணியை இறுதி செய்த தைரியசாலி தலைவன் யார்?
Sat, 25 Jan 202509:57 AM IST
Tamil Nadu News Live: ADMK Vs NTK: ’பெரியாரை அவதூறாக பேசிய சீமானை பிடித்து ஜெயிலில் போட வேண்டும்!’ முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசம்
- "ஆளுங்கட்சி அவரை பிடித்து போட வேண்டும். பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் ஸ்டாலினுக்கு பின்னால் உள்ளது. பெரியார் நினைவிடத்திற்கு சென்று ஸ்டாலின் உறுதி மொழி எடுத்தது நாடகம் என்று தெரிய வருகிறது"
Sat, 25 Jan 202508:20 AM IST
Tamil Nadu News Live: Vengaivayal: ‘வேங்கைவயல் சம்பவத்திற்கு தனிப்பட்ட விரோதமே காரணம்!’ தவறான தகவல்களை பரப்பாதீர்! தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
- முத்தையா என்பவர் கிராமசபைக் கூட்டத்தின் போது, ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது.
Sat, 25 Jan 202507:25 AM IST
Tamil Nadu News Live: Vengaivayal Case: ‘வேங்கைவயல் விவகாரம்’ போலீஸ் சொல்வதை நீதிமன்றம் கேட்க கூடாது! திருமாவளவன்
- உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சி பி சி ஐ டி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது
Sat, 25 Jan 202506:53 AM IST
Tamil Nadu News Live: Vengaivayal Case: ’வேங்கைவயல் விவகாரம்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுப்பும் சந்தேகம்! அரசிடம் பதில் உண்டா?’
- இரண்டு நாட்களுக்கு முன்பாக, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கால அவகாசம் வேண்டும் என்று காவல்துறை மனுத்தாக்கல் செய்த நிலையில், அவசர அவசரமாக, பட்டியல் சமூக இளைஞர்கள் மூன்று பேர் மீதே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாகக் கூறுவது, பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
Sat, 25 Jan 202506:24 AM IST
Tamil Nadu News Live: TVK Vijay: 'உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம்' மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் வீரவணக்கம்!
- ”உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம். தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்”
Sat, 25 Jan 202505:51 AM IST
Tamil Nadu News Live: Vengaivayal Case: வேங்கைவயல் சர்ச்சை! சட்டப்போராட்டத்தில் குதிக்கும் ஆதவ் அர்ஜூனா! காவல்துறை மீது விளாசல்!
- புலன் விசாரணை செய்த காவல்துறைக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று வந்த அழுத்தமே புகார்தாரர்களைக் குற்றவாளியாகக் காட்டும் தந்திரத்தைக் கையில் எடுக்க வைத்துள்ளதோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது.
Sat, 25 Jan 202504:50 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: உறைந்து நின்ற தங்கம் விலை! இப்போ விட்டா எப்போ? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
Sat, 25 Jan 202503:54 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: வேங்கைவயல் வழக்கு முதல் சென்னையில் இன்று டி20 கிரிக்கெட் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு கோரும் ரஞ்சித், சென்னையில் இன்று டி20 கிரிக்கெட் போட்டி, மெரினாவில் ஆமைகள் இறப்பு, கஞ்சா விற்றவர்கள் கைது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!