LIVE UPDATES

Seeman: ’பச்சிளம் குழந்தைக்கு கள் ஊட்டிய கொடுமை!’ சீமானை கண்டு பயப்படுகிறாரா முதல்வர் ஸ்டாலின்? கே.சி.பி சரமாரி கேள்வி!
Tamilnadu News Live January 21, 2025: Seeman: ’பச்சிளம் குழந்தைக்கு கள் ஊட்டிய கொடுமை!’ சீமானை கண்டு பயப்படுகிறாரா முதல்வர் ஸ்டாலின்? கே.சி.பி சரமாரி கேள்வி!
தமிழ்நாடு செய்திகள் January 21, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tue, 21 Jan 202512:36 PM IST
Tamil Nadu News Live: Seeman: ’பச்சிளம் குழந்தைக்கு கள் ஊட்டிய கொடுமை!’ சீமானை கண்டு பயப்படுகிறாரா முதல்வர் ஸ்டாலின்? கே.சி.பி சரமாரி கேள்வி!
- விழுப்புரம் அருகே கள் விடுதலை மாநாடு நடத்தி மேடையிலேயே தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே கள் அருந்தி போராட்டம் செய்கிற சீமானை கைது செய்யாததன் காரணம் என்ன? என கே.சி.பழனிசாமி கேள்வி
Tue, 21 Jan 202511:36 AM IST
Tamil Nadu News Live: EPS VS MKS: ’கடன் வாங்குவதில் தமிழ்நாடுதான் நெம்பர் 1 எங்களுக்கு பாடம் எடுக்காதீங்க!’ விளாசும் ஈபிஎஸ்!
- விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், இப்போது நிலுவைக் கடன் அளவு 26% தாண்டிவிட்டது. எந்த வகையில் இவர்கள் கடன் அளவைக் குறைத்துள்ளார்கள் ? இதை நிதி அமைச்சர் தான் விளக்க வேண்டும்.
Tue, 21 Jan 202509:33 AM IST
Tamil Nadu News Live: அமைச்சர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் 14 கோடி பறிமுதல்! அமலாக்கத்துறை தகவல்!
- அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து 13.7 கோடி ரொக்கமும், கதிர் ஆனந்த் லாக்கரில் இருந்து 75 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
Tue, 21 Jan 202508:31 AM IST
Tamil Nadu News Live: Savukku Sankar: ’புகாரை ஏற்க மறுத்த போலீஸ்! தீக்குளித்த கூலித் தொழிலாளி!’ விளாசும் டிடிவி! கலாய்க்கும் சவுக்கு சங்கர்!
- புளியந்தோப்பு பகுதியில் பட்டறை ஒன்றில் பணிபுரியும் சிலரால் தனது உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாகக் கூறி ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் கூலித் தொழிலாளி அளித்த புகாரை ஏற்க மறுத்ததோடு, அவரை தரக்குறைவாக நடத்தியதே தற்கொலை முயற்சிக்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது என டிடிவி அறிக்கை
Tue, 21 Jan 202508:18 AM IST
Tamil Nadu News Live: Tamilisai About Cow Urine: ’மாட்டின் சிறுநீர் ஒரு அமிர்த நீர்’ பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேட்டி!
- நமது தமிழ்நாட்டு சங்க இலக்கியத்தில் மாட்டு சாணம் பூசிய முற்றங்கள் சொல்லப்பட்டு உள்ளதா இல்லையா?, மாட்டு சாணத்தில் கிருமி நாசினி உள்ளது என்றால், மாட்டு சிறுநீரிலும் கிருமி நாசினி உள்ளது. மியன்மர், ஆப்ரிக்கா நாடுகளும் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். இதை ஒட்டுமொத்தமாக புறம்தள்ள முடியாது.
Tue, 21 Jan 202507:22 AM IST
Tamil Nadu News Live: ’என் தம்பி ஞானசேகரன்!’ சபாநாயகர் அப்பாவு பேச்சால் வெடித்தது சர்ச்சை! விளாசும் அண்ணாமலை!
- திமுக நிர்வாகியாயிற்றே, பாசம் இருக்கத் தானே செய்யும். தன்னை அறியாமல் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார் சபாநாயகர் திரு. அப்பாவு. பாலியல் குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரனுக்குப் பக்கபலமாக இருந்த அந்த “சார்” யாரென்று, இன்று வரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை என அண்ணாமலை விமர்சனம்
Tue, 21 Jan 202506:21 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: ’ஸ்டக் ஆகி நின்றது தங்கம் விலை!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
- Gold Rate Today: தொடர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Tue, 21 Jan 202506:15 AM IST
Tamil Nadu News Live: Annamalai: ’அண்ணாமலையின் தனிக்கட்சி முயற்சி? மோடி என்ன செய்வார் தெரியுமா?’ உடைத்து பேசும் பத்திரிகையாளர் மணி
- இனிமேல் அண்ணமலையை முழுவதுமாக பாஜக நம்பாது. அவரது மாற்றம் உறுதி என்றுதான் தகவல்கள் சொல்கின்றன. வெகுவிரைவில் தேசியத் தலைமைக்கு அழைத்துக் கொள்ளப்படுவார். மாநிலத் தலைவராக வானதி சீனிவாசனை நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tue, 21 Jan 202505:18 AM IST
Tamil Nadu News Live: Erode East ByElection: ஈரோடு இடைத்தேர்தல்!அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் ஐக்கியம்!
- ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காரணமாக அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ளன.
Tue, 21 Jan 202504:22 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ‘போலீசை சாடும் சவுக்கு சங்கர் முதல் எஸ்.வி.சேகரை புகழும் முதல்வர் வரை!’ டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: சிவகங்கையில் முதலமைச்சர் ஆய்வு, தமிழக காவல்துறையை சாடிய சவுக்கு சங்கர், விஜய்க்கு அண்ணாமலை கேள்வி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!