LIVE UPDATES

Savukku Shankar: நில அபகரிப்பு பற்றிய பேச்சு.. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை
Tamilnadu News Live January 20, 2025: Savukku Shankar: நில அபகரிப்பு பற்றிய பேச்சு.. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை
தமிழ்நாடு செய்திகள் January 20, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Mon, 20 Jan 202501:25 PM IST
Tamil Nadu News Live: Savukku Shankar: நில அபகரிப்பு பற்றிய பேச்சு.. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை
- Savukku Shankar: நில அபகரிப்பு பற்றிய பேச்சு.. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
Mon, 20 Jan 202501:18 PM IST
Tamil Nadu News Live: Mysskin: ‘பச்சை பச்சையாக பேசிய இயக்குநர் மிஷ்கின்!’ கைத்தட்டி சிரித்த பா.ரஞ்சித்! பால் முகவர் சங்கம் கண்டனம்!
- அதே மேடையில் அமர்ந்திருந்த வெற்றிமாறன், பா.ரஞ்சித், லிங்குசாமி, அமீர் போன்ற முன்னணி இயக்குனர்களும், சக நடிகர், நடிகைகளும் இயக்குனர் மிஸ்கின் அவர்களின் சபை நாகரீகமற்ற, அருவருப்பான, ஆபாசமான பேச்சினை தடுக்காமல் கைதட்டி, சிரித்து ரசித்துக் கொண்டிருந்தது அருவெறுப்பின் உச்சம்
Mon, 20 Jan 202512:37 PM IST
Tamil Nadu News Live: Annamalai: ’பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால் வேறு எங்கு அதை கட்டுவது?’ விஜய்க்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!
- 2014ஆம் ஆண்டு மோடி பதவிக்கு வரும் போது இந்தியாவில் வெறும் 73 விமான நிலையங்களே இருந்தது. தற்போது இந்தியாவில் 158 விமான நிலையங்கள் உள்ளது. தமிழ்நாட்டுக்கு கூடுதல் விமான நிலையங்கள் தேவைப்படுகிறது. இல்லை எனில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாட்டால் எட்ட முடியாது.
Mon, 20 Jan 202508:01 AM IST
Tamil Nadu News Live: TVK Vijay in Parandur: ’நாடகம் ஆடுவதில்தான் நீங்கள் கிள்ளாடிகள் ஆச்சே!’ பரந்தூரில் அரசை வச்சு செய்த விஜய்!
- கொஞ்ச நாளைக்கு முன் நமது புள்ளைங்க நோட்டீஸ் கொடுத்ததற்கு தடைவிதித்தார்கள். ஒரு துண்டுச்சீட்டு நம்ம பிள்ளைகள் தந்தற்கு கைது செய்தது ஏன் என்று புரியவில்லை. நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். மீண்டும் உங்கள் ஏகனாபுரம் ஊருக்குள்ளே நான் வருவேன்.
Mon, 20 Jan 202507:39 AM IST
Tamil Nadu News Live: TVK Vijay in Parandur: ’ஏர்பார்ட் வேணானு சொல்ல! இங்க வேணானு சொல்ற!’ திமுக அரசை கிழித்த விஜய்!
- TVK Vijay in Parandur: இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் உள்ளது. அதை நமது மக்கள் தெளிவாக புரிந்து வைத்து வைத்து உள்ளார்கள்.
Mon, 20 Jan 202507:18 AM IST
Tamil Nadu News Live: உங்கள் காலடி மண்ணை தொட்டு குடும்புறேன்! உங்களோடதான் நிற்பேன்! பரந்தூரில் விஜய் அதிரடி!
Mon, 20 Jan 202507:08 AM IST
Tamil Nadu News Live: TVK Vijay in Parandur: தவெக கொடி ஏந்தி பரந்தூர் வந்த விஜய்! சாரை சாரையாக குவிந்த மக்கள்!
- விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களை சந்தித்து பேச தவெக தலைவர் விஜய்க்கு ஒரு மணி நேரம் வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
Mon, 20 Jan 202506:40 AM IST
Tamil Nadu News Live: DMK VS ADMK: ’சமூக ஆர்வலர் ஜெபகர் கொலை விவகாரம்! ஈபிஎஸ்க்கு ஏன் இவ்வளவு அவசரம்?’ அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி!
- சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று புரியவில்லை. லாரி ஓட்டிச்சென்ற லாரி டிரைவரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? என கேள்வி
Mon, 20 Jan 202505:43 AM IST
Tamil Nadu News Live: Vijay Visit Parandur: ’விஜய் செல்வது பரந்தூருக்கா? இல்லை பாகிஸ்தானுக்கா?’ கடும் கட்டுப்பாடுகளை விதித்த போலீஸ்!
- பரந்தூருக்கு வரும் விஜயை சந்திக்க பல்வேறு பகுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
Mon, 20 Jan 202505:06 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: ’60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!
- Gold Rate Today: தொடர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Mon, 20 Jan 202504:49 AM IST
Tamil Nadu News Live: கனிமவளக் கொள்ளையை எதிர்த்த ஜெகபர் அலி கொலை! எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கண்டனம்!
- திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Mon, 20 Jan 202504:20 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’பரந்தூருக்கு புறப்பட்டார் விஜய்! கட்டுப்பாடுகளை விதித்த போலீஸ்!’ டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: பரந்தூர் மக்களை சந்திக்க செல்லும் விஜய், விஜய்யின் வருகைக்கு காவல்துறை கட்டுப்பாடு, கனிமவளக் கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் மர்ம மரணம், தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!