LIVE UPDATES

P Chidambaram: ‘நுகர்வு குறைந்துவிட்டது.. இது இந்தியாவுக்கு நல்லதல்ல’ முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி!
Tamilnadu News Live January 18, 2025: P Chidambaram: ‘நுகர்வு குறைந்துவிட்டது.. இது இந்தியாவுக்கு நல்லதல்ல’ முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி!
தமிழ்நாடு செய்திகள் January 18, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Sat, 18 Jan 202503:00 PM IST
Tamil Nadu News Live: P Chidambaram: ‘நுகர்வு குறைந்துவிட்டது.. இது இந்தியாவுக்கு நல்லதல்ல’ முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி!
- P Chidambaram : ‘நுகர்வு, உற்பத்தியை அதிகரிக்க, வரும் கூட்ட பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும், சலுகைகள் அளிக்க வேண்டும்’
Sat, 18 Jan 202512:02 PM IST
Tamil Nadu News Live: ’ஈரோடு கிழக்கு தேர்தலில் இருந்து விலக சொல்லி திமுக பேரம் பேசியதா?’ செய்தியாளர் கேள்விக்கு நாதக வேட்பாளர் திணறல்!
- ’எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.’ இந்த கேள்வியால் ஈரோடு கிழக்கு மக்களுக்கு ஏதேனும் நன்மை விளைய போகிறதா? என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பதில்
Sat, 18 Jan 202511:11 AM IST
Tamil Nadu News Live: Erode East By Election: ஈரோடு கிழக்கில் திமுக, நாதக உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு! 5 பேரின் மனு ரிஜக்ட்!
- ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காரணமாக அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ளன.
Sat, 18 Jan 202510:22 AM IST
Tamil Nadu News Live: சனாதனத்தை போற்றி அரசு சார்பில் வைக்கப்பட்ட பதாகை! சென்னை மாநகராட்சியின் செயலால் வெடித்தது சர்ச்சை!
- சென்னை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படங்கள் இடம் பெற்று உள்ளது.
Sat, 18 Jan 202509:26 AM IST
Tamil Nadu News Live: Savukku Shankar Case: கருத்து சொன்னால் வழக்கு போடுவது பாசிச அணுகுமுறை! சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் காட்டம்!
- பொதுப்பிரச்னைகளில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததற்காக தனிநபர்கள் மீது வழக்குகளைத் தொடுப்பது பாசிச அணுகுமுறையை குறிக்கின்றது என நீதிபதி தெரிவித்து உள்ளார்.
Sat, 18 Jan 202508:12 AM IST
Tamil Nadu News Live: முதல் முறையாக களத்திற்கு செல்லும் விஜய்! பரந்தூர் பயணம் ’டேக் ஆஃப்’ ஆகுமா?
- வரும் ஜனவரி 20ஆம் தேதி அன்று பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களை தவெக தலைவர் விஜய் சந்தித்து பேச உள்ளார். அரசியல் இயக்கத்தை தொடங்கிய பின்னர் முதன் முறையாக களத்திற்கு சென்று மக்களை சந்திக்கும் விஜயின் அரசியல் பயணம் ’டேக் ஆப்’ ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Sat, 18 Jan 202507:03 AM IST
Tamil Nadu News Live: TASMAC: 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையா? அன்புமணி சொன்ன அதிர்ச்சி புள்ளிவிவரம்!
- இது கடந்த ஆண்டின் விற்பனை அளவான ரூ.678.65 கோடியை விட ரூ.47 கோடி அதிகம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி அல்ல. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இன்னும் அதிக குடும்பங்கள் கண்ணீர் வடித்திருக்கின்றன என்பதையே இந்த செய்தி காட்டுகிறது.
Sat, 18 Jan 202506:12 AM IST
Tamil Nadu News Live: TN BJP: கழற்றி விடப்படுகிறாரா அண்ணாமலை! பாஜகவின் அடுத்த தலைவர் யார்?
- அடுத்து வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே வாழ்வா? சாவா? போராட்டமாக உள்ளது. எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக டெல்லி பாஜக கருதுகிறது.
Sat, 18 Jan 202505:19 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: ’சீட்டுக்கட்டு போல் குறையும் தங்கம்! ஜெட் வேகத்தில் உயரும் வெள்ளி!’ இன்றைய தங்கம் விலை நிலவரம்!
- Gold Rate Today: தொடர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Sat, 18 Jan 202504:30 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’பரந்தூர் செல்ல விஜய்க்கு அனுமதி! பொங்கல் பரிசு பெற இன்றே கடைசிநாள்!' டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி, ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு பரிசீலனை தொடக்கம், பொங்கல் பரிசுத் தொகை பெற இன்றே கடைநாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!