LIVE UPDATES

BJP Boycott Erode By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜக கூட்டணி புறக்கணிப்பு! அண்ணாமலை அறிவிப்பு!
Tamilnadu News Live January 12, 2025: BJP Boycott Erode By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜக கூட்டணி புறக்கணிப்பு! அண்ணாமலை அறிவிப்பு!
தமிழ்நாடு செய்திகள் January 12, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Sun, 12 Jan 202511:04 AM IST
Tamil Nadu News Live: BJP Boycott Erode By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜக கூட்டணி புறக்கணிப்பு! அண்ணாமலை அறிவிப்பு!
- வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.
Sun, 12 Jan 202510:48 AM IST
Tamil Nadu News Live: RN Ravi vs MK Stalin: ’ஆளுநர் உரை விவகாரத்தில் முதலமைச்சரின் ஆணவம் நல்லதல்ல!’ ஆளுநர் மாளிகை எச்சரிக்கை!
- RN Ravi vs MK Stalin: பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல.
Sun, 12 Jan 202510:37 AM IST
Tamil Nadu News Live: ’சைதாப்பேட்டைக்கு போக எனக்கு வழி தெரியும்’ என்று கூறி மா.சு.வை விளாசினாரா ஸ்டாலின்?
- ஞானசேகரன் திமுக உறுப்பினர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘ஞானசேகரன் திமுக அனுதாபியே தவிர, திமுக உறுப்பினர் இல்லை’ என்று தெரிவித்தார்.
Sun, 12 Jan 202509:04 AM IST
Tamil Nadu News Live: Periyar vs Seeman: பெரியார் குறித்த சீமானின் பேச்சு! நாம் தமிழர் கட்சிக்குள் வெடித்தது சர்ச்சை!
- ”அண்ணன் சீமான் அவர்கள் திராவிடத்தையும், பெரியாரையும் ஒழிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு பகைவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகமால் நட்பு முரணோடு கைகோர்த்து தமிழ் தேசியம் வெல்ல காலத்திற்கு ஏற்றார்போல் வேலைத்திட்டத்தை தயார் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்”
Sun, 12 Jan 202508:38 AM IST
Tamil Nadu News Live: Seeman: பெரியார் குறித்து பொதுவெளியில் விவாதிக்க ரெடி? நீங்க ரெடியா? சீமான் சவால்!
- திமுகவை எதிர்த்தால் ஆரியத்திற்கு ஆதரவாகவிடும் என்று சொல்கிறார்கள். பெரியார் அவர்கள் கடைசி வரை ஆரியர்கள் உடன் தோழமை கொண்டு இருந்தார். மூதறிஞர் ராஜாஜி உடன் அவர் நட்பில் இருந்தார். மணியம்மையை கல்யாணம் செய்ய வரும் போது, சாட்சிக் கையெழுத்து போட வாங்க என்று ஆரியத்தை துணைக்கு அழைத்தார்.
Sun, 12 Jan 202507:43 AM IST
Tamil Nadu News Live: Velmurugan: ’ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி தரும் அரசு, கம்யூனிஸ்ட் பேரணிக்கு அனுமதி மறுக்கிறது!’ வேல்முருகன் ஆவேசம்!
- இதனை காவல்துறை மந்திரி சொல்லி காவல்துறை செய்வது போல் தெரியவில்லை. காவல்துறை மோசமாக நடந்து கொள்கிறது என தெரிவித்து உள்ளார்.
Sun, 12 Jan 202506:29 AM IST
Tamil Nadu News Live: DMK VS CPM: ’பொற்கால ஆட்சிக்கு குடைச்சல் தருகிறோம் என நினைக்கிறார்கள்!’ திமுகவை பங்கமாக கலாய்க்கும் பெ.சண்முகம்!
- போராடும் உரிமையை அரசியல் சாசனம் கொடுத்து உள்ளது. திமுகவோ, அதிமுகவோ, காங்கிரஸோ தருவது இல்லை. போராட்டத்தை தடுக்க ஆளும் கட்சிக்கு எந்த உரிமையும் கிடையாது. என் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் போங்கள். ஆனால் போராடவே கூடாது என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது என பெ.சண்முகம் கேள்வி!
Sun, 12 Jan 202505:34 AM IST
Tamil Nadu News Live: குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்க போகிறீர்களா? பெரிய ஆபத்து இருக்கு! சென்னை மாநகராட்சிக்கு அன்புமணி எச்சரிக்கை!
- நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள்!
Sun, 12 Jan 202504:40 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’4.13 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்! 1.47 கோடி பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு' டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: 4.13 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம், 1.47 கோடி பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு, நெல்லையப்பர் கோயில் யானை உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!