LIVE UPDATES

H Raja: ‘திமுக தாலிபான் அரசு..’ திருப்பரங்குன்றம் விவகாரம்.. பாஜக தலைவர் ஹெச்.ராஜா கடுமையான விமர்சனம்!
Tamilnadu News Live February 4, 2025: H Raja: ‘திமுக தாலிபான் அரசு..’ திருப்பரங்குன்றம் விவகாரம்.. பாஜக தலைவர் ஹெச்.ராஜா கடுமையான விமர்சனம்!
தமிழ்நாடு செய்திகள் February 4, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tue, 04 Feb 202503:11 PM IST
Tamil Nadu News Live: H Raja: ‘திமுக தாலிபான் அரசு..’ திருப்பரங்குன்றம் விவகாரம்.. பாஜக தலைவர் ஹெச்.ராஜா கடுமையான விமர்சனம்!
- H Raja: ‘144 தடை உத்தரவு இருக்கும்போது அமைச்சர் மூர்த்தி ஊர்வலமாகச் சென்று மாலை போடலாம்? இந்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாதா? இந்து விரோத தீய அரசை தூக்கி எறிந்தால் மட்டும் தான் தமிழர்கள் சம உரிமையோடு வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது’
Tue, 04 Feb 202502:46 PM IST
Tamil Nadu News Live: Thiruparankundram: திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரையில் குவிந்த இந்து அமைப்பினர்.. ஸ்தம்பித்த பழங்காநத்தம்!
- Thiruparankundram: தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோயில் முன்பாக திரண்ட முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் 1000-க்கும் மேற்பட்டோர், ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ என கோஷங்களை எழுப்பிய ஆரவாரம் செய்தனர்.
Tue, 04 Feb 202511:23 AM IST
Tamil Nadu News Live: PMK: ஆக்டீவ் அரசியலில் குதித்த சௌமியா அன்புமணி! ராமதாஸ் அதிருப்தி? பாமகவில் அடுத்த களேபரம்! நடப்பது என்ன?
- கடந்த சில நாட்களாக ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து உள்ள நிலையில் அன்புமணிக்கு ஆதரவாக நேரடி கள அரசியல் செயல்பாடுகளை சௌமியா அன்புமணி தீவிரப்படுத்தி உள்ளார்.
Tue, 04 Feb 202510:57 AM IST
Tamil Nadu News Live: ED Raid: ஆண்டாள் ஆறுமுகத்தின் 1000 கோடி சொத்துக்கள் பறிமுதல்! அமலாக்கத்துறை அதிரடி!
- சோதனையின் போது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உள்ள பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. மேலும், ரூ. 912 கோடி மதிப்புள்ள நிரந்தர வைப்புத் தொகை ரசீதுகள் மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகளும் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tue, 04 Feb 202510:36 AM IST
Tamil Nadu News Live: அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! பத்திரிகையாளர்களிடம் பறித்த செல்போன்களை திருப்பி தர நீதிமன்றம் உத்தரவு
- முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கில் பத்திரிகையாளர்களை தவிர வேறு யாரையெல்லாம் விசாரித்தீர்கள் கோட்டூர்புரம் காவல் ஆய்வாளரை விசாரித்தீர்களா? அவரது வாக்குமூலம் எங்கே என்றும் நீதிபதி இளந்திரையன் கேள்வி
Tue, 04 Feb 202508:58 AM IST
Tamil Nadu News Live: Thiruparankundram: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை வீட்டுசிறையில் வைத்த போலீஸ்! உச்சகட்ட பதற்றம்! ஏன் தெரியுமா?
- நேற்றைய தினம் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று காலை திருப்பூரில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமண்யம் கைது செய்யப்பட்டார். மேலும் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தி திட்டமிட்டதாக பல்வேறு இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
Tue, 04 Feb 202508:15 AM IST
Tamil Nadu News Live: Hindu Munnani: இந்து முன்னணி தலைவர்களை தட்டித் தூக்கும் போலீஸ்! ஸ்டாலினை சாடும் எல்.முருகன்!
- அப்போது இந்த அடாவடித்தனமான கைது நடவடிக்கை மேற்கொள்ளாத காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும், திருப்பரங்குன்றத்திற்கு தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எப்படி நியாயமாகும்?
Tue, 04 Feb 202506:54 AM IST
Tamil Nadu News Live: Udhayanidhi Stalin: ப்ரஸ் மீட்டில் சீமான் குறித்த கேள்வி! அப்படியே திரும்பி சென்ற துணை முதல்வர் உதயநிதி! நடந்தது என்ன?
- சென்னை சைதாப்பேட்டையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத் தக்கது. அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Tue, 04 Feb 202506:29 AM IST
Tamil Nadu News Live: Caste Census: ’தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு! ஸ்டாலினின் சமூகநீதி வேடம் கலைந்தது!’ விட்டு விளாசும் ராமதாஸ்!
- சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளாது என்ற ஒரே பொய்யை மீண்டும், மீண்டும் கூறி சமூகநீதிக்கு முட்டுக்கட்டை போடுகிறது தமிழக அரசு. இதன் மூலம் முதல்வரின் போலி சமூகநீதி வேடம் கலைந்திருக்கிறது.
Tue, 04 Feb 202505:57 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! அடேங்கப்பா! தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
- Gold Rate Today: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கம் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
Tue, 04 Feb 202505:09 AM IST
Tamil Nadu News Live: Education Loan: குறிப்பிட்ட ஜாதி மாணவர்களுக்கே கல்விக்கடனை ரத்து செய்வதா? கொதிக்கும் அண்ணாமலை!
- நாட்டிலேயே கல்விக் கடன் மிக அதிகமாக நிலுவையில் இருப்பது தமிழகத்தில்தான். இதற்குக் காரணம், இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் பலப்பல தேர்தல்களாகத் தொடர்ந்து ஏமாற்றி வருவதுதான். திமுகவின் பொய்களுக்கு, இளைஞர்கள் எதிர்காலம் பாழாக வேண்டுமா?
Tue, 04 Feb 202504:13 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லத் தடை! பாஜகவை விளாசும் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்
- TOP 10 NEWS: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லத் தடை, அரசு மீது அண்ணாமலை விமர்சனம், பாஜக மீது முதலமைச்சர் விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!