Tamilnadu News Live December 9, 2024: TOP 10 NEWS: ’சீறும் ஆதவ் அர்ஜூனா! டங்ஸ்டனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்! ஆதரித்த அதிமுக!' டாப் 10 நியூஸ்!
தமிழ்நாடு செய்திகள் December 9, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Mon, 09 Dec 202402:33 PM IST
- TOP 10 NEWS: விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா சஸ்பெண்ட், திருமா குறித்து ஆதவ் அர்ஜூனா அறிக்கை, டங்ஸ்டன் ஏலத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம், தமிழக அரசுக்கு ஈபிஎஸ் எதிர்ப்பு, ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Mon, 09 Dec 202401:44 PM IST
- தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.
Mon, 09 Dec 202409:38 AM IST
- திமுக அரசு எந்த விதத்திலும் அலட்சியமாக இருந்தது இல்லை. அரசை பொறுத்தவரை நிச்சயமாக சொல்கிறேன். ஏலம் விட்டாலும் சரி, நிச்சயமாக உறுதியாக அதற்கு உரிய அனுமதியை தர வாய்ப்பே இல்லை. நான் முதலமைச்சராக இருக்கும் வரையில் நிச்சயமாக ஒன்றிய அரசு இந்த திட்டத்தை கொண்டு வர முடியாது. வந்தால் தடுத்தே தீருவோம்.
Mon, 09 Dec 202408:34 AM IST
- ”எப்போது பார்த்தாலும் நாங்கள் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாடு மக்கள் பாதிக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் போது, அதை தடுத்து நிறுத்தும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து இருக்க வேண்டும்”
Mon, 09 Dec 202406:39 AM IST
- ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து திருமாவளவன் அதிரடி.. கட்சியின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என புகார்
Mon, 09 Dec 202403:50 AM IST
இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமைகளை உடனடியாக ரத்து செய்யுமாறும், அந்தந்த மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அத்தகைய உரிமைகளை வழங்க வேண்டாம் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசு தீர்மானம் கொண்டு வரும்.
Mon, 09 Dec 202403:32 AM IST
தமிழக கடற்கரையில் இருந்து சுமார் 46 கடல் மைல் தொலைவில் ஒரு படகில் இருந்த நான்கு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Mon, 09 Dec 202403:21 AM IST
சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்த போலீஸ், தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.