LIVE UPDATES
Tamilnadu News Live December 20, 2024: Annamalai: ‘சத்தியமங்கலம் காட்டுக்குள் இஸ்லாமிய பயங்கரவாதிகள்’ கோவையில் அண்ணாமலை பகீர்!
தமிழ்நாடு செய்திகள் December 20, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Fri, 20 Dec 202403:35 PM IST
Tamil Nadu News Live: Annamalai: ‘சத்தியமங்கலம் காட்டுக்குள் இஸ்லாமிய பயங்கரவாதிகள்’ கோவையில் அண்ணாமலை பகீர்!
- ‘திமுக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்து தான் செய்யப்படுகிறது. இது இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் திருப்பி விடும் செயல் ஆகும்’
Fri, 20 Dec 202402:30 PM IST
Tamil Nadu News Live: கோவையில் அண்ணாமலை கைது.. தடுத்து நிறுத்திய போலீஸ்.. தடையை மீற முயன்ற போது சம்பவம்!
- கோவையில் கறுப்பு தின பேரணி நடத்தி, போலீஸ் தடையை மீறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கைது செய்யப்பட்டார்.
Fri, 20 Dec 202412:05 PM IST
Tamil Nadu News Live: Savukku Shankar : ‘ஜாமின் இல்லை.. மீண்டும் சிறை..’ சவுக்கு சங்கர் கோரிக்கை ஒத்திவைப்பு.. டிச.24 வரை மதுரை சிறை!
- இதேபோன்று இவ்வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய மனு மீது விசாரணை நடைபெற்ற நிலையில் சவுக்கு சங்கர் ஜாமின் வழங்கும் மனு மீது டிசம்பர் 24ஆம் தேதியான திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Fri, 20 Dec 202410:36 AM IST
Tamil Nadu News Live: வடசென்னை பட பாணியில் கருத்து கேட்பு கூட்டம்!’சீமானே கிளம்பு’ அதிர்ந்த எதிர்ப்பு கோஷம்! அசால்டாக பேசிய சீமான்!
- நீர், உணவு, காற்று ஆகியவை நஞ்சாகிவிட்ட பிறகு வெளிச்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள். பிணத்தை வைத்து வேண்டுமானால் அழலாம் என சீமான் பேச்சு
Fri, 20 Dec 202409:30 AM IST
Tamil Nadu News Live: ’செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?’ லிஸ்டு கேட்ட உச்சநீதிமன்றம்! அரசுக்கு அதிரடி நோட்டீஸ்!
- வாதங்களை கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள், போக்குவரத்து துறை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் உள்ள சாட்சியங்கள் குறித்த விவரங்களை ஜனவரி 15ஆம் தேதிக்குள் தர உத்தரவிட்டு உள்ளனர்.
Fri, 20 Dec 202408:10 AM IST
Tamil Nadu News Live: Savukku Shankar: ‘நீதிபதி போட்ட உத்தரவு.. மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர்’ நடந்தது என்ன?
- நிர்வாக காரணங்களுக்காக யூடியுபர் சவுக்கு சங்கரின் பிரதான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வுக்கு மாற்றம் செய்தார்.
Fri, 20 Dec 202408:10 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ஈரோடு கிழக்கில் யார் போட்டி?, மீண்டும் கூடும் பேரவை! டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி, ஜனவரி 6ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடக்கம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக உத்தரவு, நெல்லையில் ஒருவர் வெட்டிக் கொலை, ஈபிஎஸ் மீது முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Fri, 20 Dec 202407:30 AM IST
Tamil Nadu News Live: 'சர்வாதிகாரியாக மாறும் ஆவின், ஹிட்லரான கோவை ஆட்சியர்' கதறும் பால் விற்பனையாளர்கள்!
- பால் முகவர்கள் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் பெறுவதற்கும், பொதுமக்கள் மாதாந்திர அட்டை மூலம் ஆவின் பால் பாக்கெட்டுகள் பெறுவதற்கும் இணையவழி மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்கிற சர்வாதிகார உத்தரவை கோவை மாவட்ட ஆட்சியர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்
Fri, 20 Dec 202406:24 AM IST
Tamil Nadu News Live: UGC NET exam: மறுபடியும் மொதல்ல இருந்தா? பொங்கல் அன்று யுஜிசி - நெட் தேர்வு! வச்சு செய்யும் சு.வெங்கடேசன்!
- தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள "யுஜிசி - நெட்" தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் வருகிறது. ஜனவரி 14 அன்று பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் என தொடர் விடுமுறை இருந்தும் மேற்கண்ட தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Fri, 20 Dec 202405:18 AM IST
Tamil Nadu News Live: Madurai : ‘ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்..’ மூதாட்டி மறைவை திருவிழாவாக கொண்டாடிய குடும்பத்தினர்!
- கல்யாண சாவு என்று கிராமத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. அதை, அப்படியே, கண் முன் கொண்டு வந்து, கண்ணீர் மல்க நடக்கும் நிகழ்வை, கலகலப்பாக மாற்றியது நாகம்மாள் பாட்டியின் குடும்பம்.
Fri, 20 Dec 202405:16 AM IST
Tamil Nadu News Live: Gold Rate Today: ‘சீட்டுக்கட்டு போல் சரியும் தங்கம் விலை!’ சவரன் எவ்வளவு தெரியுமா?
- Gold Rate Today: சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Fri, 20 Dec 202404:42 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை முதல் ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு வரை! டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: வங்ககடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, சப்தகிரி விரைவு ரயில் நிறுத்தம், மதுரையில் 24 மணி நேர விமான சேவை, புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு, ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!