LIVE UPDATES
Tamilnadu News Live December 18, 2024: Savukku Shankar: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
தமிழ்நாடு செய்திகள் December 18, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Wed, 18 Dec 202412:43 PM IST
Tamil Nadu News Live: Savukku Shankar: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
- சென்னை தேனாம்பேட்டையில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நேற்று இரவு காவல்துறை பாதுகாப்புடன் தேனி அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக இன்று ஆஜர் செய்யப்பட்டார்.
Wed, 18 Dec 202412:02 PM IST
Tamil Nadu News Live: ‘அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்.. ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்!
- ‘எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்’
Wed, 18 Dec 202411:37 AM IST
Tamil Nadu News Live: எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதா? அமித்ஷாவிற்கு எதிராக கொந்தளித்த தவெக தலைவர் விஜய்
- மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக கூறி அவருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Wed, 18 Dec 202411:31 AM IST
Tamil Nadu News Live: ‘அம்பேத்கரை தோற்கடித்தது காங்கிரஸ்.. பட்டியலினத்தவரை துணை முதல்வர் ஆக்குங்க..’ வானதி ஆவேசம்!
- ‘டாக்டர் அம்பேத்கர் மீது திமுகவுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உண்மையிலேயே மதிப்பும், மரியாதையும் இருந்தால் உடனடியாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதலமைச்சராக்க வேண்டும். திமுக பொதுச்செயலாளராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும்’
Wed, 18 Dec 202411:06 AM IST
Tamil Nadu News Live: ‘டூரிஸ்ட் கைடு அமித்ஷா.. கேட்டாலே எரிச்சல் வருகிறது’ அம்பேத்கர் குறித்து பேச்சு.. உதயநிதி காட்டமான பதிவு!
- ‘அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்’
Wed, 18 Dec 202409:04 AM IST
Tamil Nadu News Live: ‘தமிழக அரசு தலைகுனிய வேண்டும்’ நீதிமன்ற கேள்வியை சுட்டிக்காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டம்!
- ‘கள்ளச்சாராய விற்பனையை தமிழக காவல்துறை கண்டும் காணாமலும் இருந்ததைத் தான் இது காட்டுகிறது; கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது தவறு
Wed, 18 Dec 202407:52 AM IST
Tamil Nadu News Live: ‘தவிக்கும் மக்களுக்கு உதவி வேண்டும்’ விழுப்புரத்தில் ஆர்பாட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!
- ‘மாறாக, ஸ்டாலின் தலைமையிலான கடந்த 43 மாதகால விடியா திமுக ஆட்சியில் மக்கள் பெருந்துன்பங்களுக்கு ஆளாகி, தங்களது இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கு சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். விடியா திமுக அரசின் இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்’
Wed, 18 Dec 202407:21 AM IST
Tamil Nadu News Live: ‘பட்டியலின மக்களுக்குச் செய்தது என்ன?’ பட்டியலிட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்!
- ‘அரசின் அனைத்து துறைகளிலும் சமூகநீதிக் கோட்பாட்டை வலியுறுத்தி செயல்படும் திராவிட மாடல் அரசின் கீழ் ஆதி திராவிடர் நலத்துறை மேலும் பல சாதனைகளைப் படைக்கும். சமூகநீதி இலட்சியப் பயணத்தில் இந்தியாவிலேயே முன்னோடியாக செயல்படும் முதலமைச்சரின் தலைமையின் கீழ் சமத்துவ சமுதாயம் நோக்கி பயணப்படும்’
Wed, 18 Dec 202406:51 AM IST
Tamil Nadu News Live: ‘சீமான் தான் திமுக கூட்டணிக்கு அனுப்பினார்.. கூட்டணி உடன்பாடு தேர்தலுடன் முடிந்தது’ வேல்முருகன் பரபரப்பு பேட்டி!
- ‘வேறுவழியில்லாமல் திமுக உடன் கூட்டணி உடன்படிக்கை வைத்துக் கொண்டோம். அவ்வளவு தான். தேர்தலுக்கு உடன்படிக்கை வைத்துக் கொண்டோம், தேர்தல் முடிந்துவிட்டது. இன்று சட்டமன்ற உறுப்பினராக அந்த தொகுதி சார்பாக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஆனால், 234 தொகுதிகளுக்கான பிரச்னையை நான் பேசலாம்’
Wed, 18 Dec 202406:26 AM IST
Tamil Nadu News Live: ‘தமிழகத்தில் RSS ஆட்சி நடக்குது.. எடப்பாடி சொன்னது சரி தான்.. ஸ்டாலினிடம் சிஸ்டம் இல்லை’ தவாக தலைவர் வேல்முருகன்!
- கவர்னரை எதிர்க்குறீங்க, சங்கி கவர்னர்னு சொல்றீங்க. அந்த சங்கி கவர்னர், தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை தமிழக நியமனங்களில் நியமிக்கிறார் என்றால், எப்படி? மத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு அடி பணிகிறது. அதிகாரிகள், அமைச்சர்களை ஏமாற்றுகின்றனர்.