LIVE UPDATES
Tamilnadu News Live December 11, 2024: DMK VS ADMK: ’பச்சோந்தி ரகுபதி ஒரு மங்குனி மந்திரி!’ 23ஆம் புலிக்கேசி படத்தை சுட்டிக்காட்டி ஆர்.பி.உதயகுமார் கலாய்!
தமிழ்நாடு செய்திகள் December 11, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Wed, 11 Dec 202411:48 AM IST
Tamil Nadu News Live: DMK VS ADMK: ’பச்சோந்தி ரகுபதி ஒரு மங்குனி மந்திரி!’ 23ஆம் புலிக்கேசி படத்தை சுட்டிக்காட்டி ஆர்.பி.உதயகுமார் கலாய்!
- அமைச்சர் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியை மேற்கோள் காட்டியதால் அதே திரைப்படத்தை நானும் மேற்கோள் காட்டுகிறேன். மற்றபடி, இவரது தலைவர், வாரிசு, சக அமைச்சர்கள் என ஒவ்வொருவராக டெல்லிக்கு காவடி தூக்குவதை எல்லாம், மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் பாஜக -பாசிச எதிர்ப்பு என்று நாடக வசனம் வேறு!
Wed, 11 Dec 202409:44 AM IST
Tamil Nadu News Live: Weather Update: ’நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!’ 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட் எச்சரிக்கை!
- கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை
Wed, 11 Dec 202408:58 AM IST
Tamil Nadu News Live: விசிக கொடி விவகாரம்! ஊழியர்கள் சஸ்பெண்ட் எதிரொலி! மதுரை வருவாய் துறையினர் காலவரையற்ற போராட்டம்!
- இந்த பிரச்னைகளுக்கு கடைநிலை ஊழியர்களை பலிகடா ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைக்குள் இதற்கு தீர்வு வராவிட்டால், மாநிலம் முழுவதும் போராட்டத்தை விரிவு செய்வோம். பணிநீக்க ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
Wed, 11 Dec 202408:07 AM IST
Tamil Nadu News Live: ’தமிழ்நாட்டில் பைக் டேக்ஸிகளுக்கு கட்டுப்பாடு ஏன்?’போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்!
- பைக் டாக்ஸி ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு தரும் சூழலும் உள்ளது. இன்னொரு புறம் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆபத்தாக உணர்கிறார்கள் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி
Wed, 11 Dec 202406:36 AM IST
Tamil Nadu News Live: Tiruvannamalai Deepam 2024: கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் மலையேற பக்தர்கள் தடை!
- திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் போது மலை மீது பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
Wed, 11 Dec 202406:20 AM IST
Tamil Nadu News Live: ’பாபா படத்திற்கு எதிர்ப்பு! பேத்தி படத்திற்கு நட்பா?’ வாழ்கை ஒரு வட்டம்! விளாசும் ராமசுகந்தன்!
- ”வாழ்க்கை ஒரு வட்டம்.... பாபா படத்தை வெளியிடாமல் பாமகவினர் பிரச்சினை உண்டாக்கிய பொழுது தமிழ்நாட்டில் உள்ள வன்னிய தலைவர்களை சந்தித்து அப்போது திரு ரஜினிகாந்த் அவர்கள் உரையாடிய பொழுது... இன்று அதே பாமகவினர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து அவர்கள் குடும்பம் தயாரிக்கும் படத்தை வெளியிட அழைத்தனர்”
Wed, 11 Dec 202404:50 AM IST
Tamil Nadu News Live: Rain Warning: ’சென்னை முதல் நாகை வரை! 14 மாவட்டங்களில் 1 மணி வரை மழை’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது
Wed, 11 Dec 202404:33 AM IST
Tamil Nadu News Live: மீண்டும் மீண்டுமா? அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து விற்பனை.. இதோ இன்றைய நிலவரம்!
- சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Wed, 11 Dec 202404:15 AM IST
Tamil Nadu News Live: Vijay Vs DMK: ’சினிமாவை பார்த்தோமா, ரசித்தோமா அதோடு மறந்து விட வேண்டும்’ திமுகவினருக்கு அமைச்சர் தாமோ அன்பரசன் அறிவுரை!
- சினிமாவை நாம் சும்மா பார்ப்பது கிடையாது, காசு கொடுக்கிறோம். ரசித்தோமா அதோடு வெளியே வந்து விட வேண்டும். அதோடு நமக்கு கட்சிதான் ஞாபகம் இருக்க வேண்டுமே தவிர, நடிகர்கள் ஞாபகம் இருக்க கூடாது என நடிகர் விஜய் பெயரை குறிப்பிடாமல் தாமோ அன்பரசன் விமர்சனம்