LIVE UPDATES
Tamilnadu News Live December 10, 2024: மதுரையில் விசிக கொடியேற்றம் எதிரொலி! வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட்!
தமிழ்நாடு செய்திகள் December 10, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tue, 10 Dec 202411:10 AM IST
Tamil Nadu News Live: மதுரையில் விசிக கொடியேற்றம் எதிரொலி! வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட்!
- மதுரையில் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் விசிக கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர் அனிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
Tue, 10 Dec 202409:58 AM IST
Tamil Nadu News Live: தமிழகத்தில் நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! 6 மாவட்டங்களின் இன்று கனமழை எச்சரிக்கை!
- மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tue, 10 Dec 202409:30 AM IST
Tamil Nadu News Live: ’அதானி தொடர்பாக கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க தயார்; TNEB ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு தயாரா?’ அன்புமணி கேள்வி!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் எழுப்ப விரும்பும் வினா என்னவென்றால், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ள வழக்கில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து அவருடைய பதில் என்ன? என்பதுதான்.
Tue, 10 Dec 202408:50 AM IST
Tamil Nadu News Live: ’5 நாள் நடக்க வேண்டிய சட்டமன்றம், 2 நாள் கூட நடக்கல!’ புள்ளி விவரத்துடன் விளாசிய எடப்பாடி பழனிசாமி!
- 2021 சட்டமன்ற தேர்தலின் போது ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்றத்தை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார். அப்படி பார்த்தால் இதுவரை 400 நாட்கள் பேரவை நடந்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை113 நாட்கள்தான் கூட்டத் தொடர் நடந்து உள்ளது.
Tue, 10 Dec 202407:41 AM IST
Tamil Nadu News Live: ’அண்ணா மண், தம்பி மண் அல்ல...! எல்லா மண்ணிலும் தடுப்பணை கட்டித் தருகிறேன்’ அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை!
- காஞ்சிபுரத்தில் நுழைந்து கடலில் கலக்கிறது. பாலாற்றின் நடுவே தடுப்பணை கட்ட வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் மண்ணின் மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு என எழிலரசன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்
Tue, 10 Dec 202406:55 AM IST
Tamil Nadu News Live: ’அதானியை நான் சந்திக்கவில்லை!’ பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
- “அதானி உடன் முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளது. அதானி முதலமைச்சர் சந்தித்துவிட்டு சென்றார் என்று பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என்ன காரணத்தாலோ அவர் அதை பேசவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவேளை உண்மை தெரிந்துவிட்டது என்பதால் விட்டுவிட்டு இருப்பார் என்று கருதுகிறேன்.”
Tue, 10 Dec 202405:47 AM IST
Tamil Nadu News Live: ’உ.வே.சாவின் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்!’ பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு!
- தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி கோரிக்கை விடுத்து இருந்தார்.
Tue, 10 Dec 202404:50 AM IST
Tamil Nadu News Live: 'என் பதவியே போயிடும்! கலங்கிய பெருந்தகை! கலாய்த்த துரைமுருகன்!’ சட்டப்பேரவையில் சிரிப்பலை!
- "திருப்புகழ் கமிட்டியை அரசு நிறைவேற்றும் என்று வாக்குறுதி கொடுத்து உள்ளேன். எனது தொகுதியில் எனக்கு நெருக்கடி உள்ளது. வரும் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் நிறைவேற்றவில்லை என்றால் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது உங்களிடம்தான் உள்ளது"
Tue, 10 Dec 202404:25 AM IST
Tamil Nadu News Live: அசுர வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்.. வெள்ளி விலையும் அதிரடி உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!
- சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.