Tamil Top 10 News: பட்டாசு ஆலையில் வெடி விபத்து முதல் டெலிகிராம் நிறுவனர் கைது வரை - டாப் 10 நியூஸ்-today morning top 10 news with tamil nadu national and world on august 25 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News: பட்டாசு ஆலையில் வெடி விபத்து முதல் டெலிகிராம் நிறுவனர் கைது வரை - டாப் 10 நியூஸ்

Tamil Top 10 News: பட்டாசு ஆலையில் வெடி விபத்து முதல் டெலிகிராம் நிறுவனர் கைது வரை - டாப் 10 நியூஸ்

Karthikeyan S HT Tamil
Aug 25, 2024 09:29 AM IST

Tamil Top 10 News: பட்டாசு ஆலையில் வெடி விபத்து, தமிழக ஆளுநர் டெல்லி பயணம், டெலிகிராம் நிறுவனர் கைது உள்ளிட்ட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Tamil Top 10 News: பட்டாசு ஆலையில் வெடி விபத்து முதல் டெலிகிராம் நிறுவனர் கைது வரை - டாப் 10 நியூஸ்
Tamil Top 10 News: பட்டாசு ஆலையில் வெடி விபத்து முதல் டெலிகிராம் நிறுவனர் கைது வரை - டாப் 10 நியூஸ்

பட்டாசு ஆலை வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நத்தம் போலீசார், 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘குட் நியூஸ்’

மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; 23 லட்சம் பேர் பயன் பெறும் இந்த ஓய்வூதிய திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

121 பேர் எலி காய்ச்சலுக்கு உயிரிழப்பு

கேரளாவில் இந்தாண்டில் மட்டும் இதுவரை, 121 பேர் எலி காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். பொதுமக்கள் கவனத்துடன், விழிப்புணர்வுடன் இருக்கும்படி மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் நடராஜன் (58) போலீசாரால் கைது. தனது தம்பி கொலைக்கு காரணமானவர்கள் வீட்டில், அதை நடத்திக் காட்டுவோம் என நடராஜன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நடராஜனின் சகோதரும் அதிமுக பிரமுகருமான பார்த்திபன் கடந்தாண்டு ஆகஸ்ட் 17ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

மேட்டூர் அணை நீர் நிலவரம்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6598 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் விநாடிக்கு 12,700 கன அடியாக இருக்கும் நிலையில், நீர் இருப்பு 90.92 டி.எம்.சி. ஆக உள்ளது.

ஆளுநர் டெல்லி பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த மாதத்தில் 3-வது முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலம் நீட்டிப்பு குறித்தோ, புதிய ஆளுநர் குறித்த அறிவிப்போ வெளிவராததால், தமிழக ஆளுநராக அவரே தொடர்கிறார்.

விபத்து - 2 பேர் படுகாயம்

சென்னை சைதாப்பேட்டை அண்ணா சாலையில் தாறுமாறாக சென்ற கார், சாலைத் தடுப்பில் மோதி விபத்து - 2 பேர் படுகாயம். விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை 4 கார் பந்தயம் தொடங்கியது

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில், ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது அடுத்த சுற்றுப்போட்டி சென்னை தீவுத்திடல் சாலையில் 2 நாட்கள் நடக்கிறது.

முத்தமிழ் மாநாட்டில் கண்காட்சி ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு

பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் மாநாட்டில் கண்காட்சி ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு பொதுமக்கள் இலவசமாக பார்வையிடும் வகையில் கண்காட்சியை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

டெலிகிராம் நிறுவனர் கைது

டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். குற்றச் செயல்கள் செயலியின் வழியே நடைபெறுவதை தடையின்றி அனுமதிப்பதாக பதிவான வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.