Tamil Top 10 News : கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு முதல் ஜம்மு காஷ்மீர் நிலநடுக்கம் வரை முக்கிய செய்திகள்!
Morning Tamil Top 10 News: கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Morning Tamil Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தவெக கொடி ஒத்திகை நிகழ்வு
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடி அறிமுக விழா வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தவெக கொடி ஒத்திகை நிகழ்வு நடந்து உள்ளது. இதில் நடிகர் விஜயின் உருவம் பொறித்த மஞ்சள் நிறக் கொடி ஏற்றப்பட்டு உள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை: ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் ஆந்திராவில் பதுங்கி இருந்த கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கு வரும் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிம்ன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. பொன்னை பாலுவுக்கு ஆற்காடு சுரேஷின் மனைவியான பொற்கொடி 1.5 லட்சம் ரூபாய் வழங்கியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 24ஆவது நபராக பொற்கொடியை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர கொலைக்கு நீதி கேட்டு அரசு, மருத்துவர்கள் அன்றாட பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெண் மருத்துவரின் மரணம் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க தடை
முதல்வர் சித்தராமையா மீதான முடா நில முறைகேடு விவகாரத்தில் விசாரணை நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்த விசாரணை 29ந்தேதி நடைபெறும். அதுவரை இந்த உத்தரவு தொடரும் என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றமா?
வங்க தேசத்தில் நடைபெற இருந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2025 வரை விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ், பாரி வில்மோர்!
NASA: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் போயிங் நிறுவனத்தின் புதிய ஸ்டார்லைனர் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். இருப்பினும், விமானம் நங்கூரமிடுவதற்கு முன்பு ஹீலியம் கசிவுகள் மற்றும் உந்துதல் தோல்விகளை சந்தித்தது, இந்நிலையில் இரண்டு விண்வெளி வீரர்களுக்கான திரும்பும் விமானத்தை 2025 க்கு ஒத்திவைத்தது.
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை
குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை தீவிரம்!
ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை நோய் பிரச்சனைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஸ்டாலின் கடிதத்திற்கு அஸ்வினி வைஷ்ணவ் கடிதம்!
"காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.879 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 7 சதவீதம் அதிகம் ஆகும். ரெயில்வே திட்டங்களுக்கு 2,749 ஹெக்டர் நிலம் தேவைப்படும் இடத்தில் 807 ஹெக்டர் மட்டுமே கிடைத்துள்ளது. நிலம் பெற்று தருவதற்கு தமிழக அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என அஸ்வினி வைஷ்ணவ் முதல்வர் ஸ்டாலின் கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்