Tamil News  /  Tamilnadu  /  Today Is Diary Mindan Ananda Rangam Pillai's Memorial Day!

டைரி மைந்தன் ஆனந்த ரங்கம் பிள்ளை நினைவு தினம் இன்று!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 10, 2024 06:10 AM IST

அன்றைய செல்வ செழிப்பை விளக்கும் கடல் வணிகம், வணிகத்தோடு தொடர்புடைய வெளிநாட்டு பயணிகளின் இந்திய வருகை உள்ளிட்டவரை இவரது நாட்குறிப்புகளில் முக்கிய இடத்தை பெற்றிருந்தது.

ஆனந்த ரங்கம் பிள்ளை
ஆனந்த ரங்கம் பிள்ளை

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனாலும் டைரியில் எழுதப்படும் எழுத்துக்கள் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு உதாரணம் தான் ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் ஆகும். அவரது நினைவு நாளான இன்று இது குறித்த தகவல்களை திரும்பி பார்க்கலாம்.

யார் இந்த ஆனந்த ரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கம் பிள்ளை மார்ச் 30, 1709 அன்று பெரம்பூரில் திருவேங்கடம் பிள்ளை எனும் யாதவர் குலத்து வணிகருக்கு மகனாக பிறந்தார். ஆனந்த ரங்கம் பிள்ளைக்கு மூன்று வயது இருக்கையிலேயே தாய் இறந்துவிட்டார். இந்நிலையில் பாண்டிச்சேரியில் திருவேங்கடம் பிள்ளையின் மைத்துனர் நைனியா பிள்ளை ப்ரெஞ்சு ஆட்சியில் பிரெஞ்சு கவர்னர் குல்லியம் டி ஹெபெர் (Guillaume André d'Hébert) க்கு தலைமை இந்தியத் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அவரது அழைப்பின் படி திருவேங்கடம் பிள்ளை 1716-ல் பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்தார். அங்கு அரசுப் பணியில் உதவியாளராகச் சேர்ந்தார்.

இந்நிலையில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார். எம்பார் என்பவரிடம் கல்வி பயின்ற ஆனந்த ரங்க பிள்ளை, அரசுப் பணிகளில் அப்பாவுக்கு உதவி யாக இருந்தார். பிரெஞ்சு ஆளுநர் ட்யூப்ளக்ஸின் மொழி பெயர்ப்பாளராக 1747-ல் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து பல தொழில்களை மேற்கொண்டார். அதுமட்டும் இல்லாமல் சொந்தமாக கப்பல் வைத்திருந்தார். இந்நிலையில் தான் ஆனந்த ரங்கம் பிள்ளை நாட்டில் நடக்கும் குறிப்புகளை எழுதி வைக்க தொடங்கினார்.

அப்போது பல மொழிகளையும் அறிந்து வைத்திருந்ததால் ஆனந்த ரங்கம் பிள்ளை இந்திய மன்னர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே மொழி பெயர்ப்பாளராகச் செயல்பட்டார். இதனால் முசாபர் சங் என்ற மன்னர் 3 ஆயிரம் குதிரைகளை வழங்கி மன்சுபேதார் பட்டத்தையும் வழங்கினார். அத்தோடு செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாக ஜாகீர்தாராகவும் நியமிக்கப்பட்டார்.

இவர் தனது வாழ்வில் சுமார் 25 ஆண்டுகள் எழுதிய நாட்குறிப்புகள், அன்றைய சமூக மாற்றம், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப்படையெடுப்பு, குற்றவாளிகளின் தண்டனை, டெல்லி மீதான பாரசீகர்களின் படையெடுப்பு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள், அரசியல் சூழ்ச்சிகள், சட்ட நுட்பங்கள் அன்றைய செல்வ செழிப்பை விளக்கும் கடல் வணிகம், வணிகத்தோடு தொடர்புடைய வெளிநாட்டு பயணிகளின் இந்திய வருகை உள்ளிட்டவரை இவரது நாட்குறிப்புகளில் முக்கிய இடத்தை பெற்றிருந்தது.

அவருடைய நாட்குறிப்பின் வழியாக மன்னர்களின் குணங்கள், ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், மக்கள் பட்ட பாடுகள், இந்திய வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது, புதுச்சேரி, ஆற்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சி, ஹைதராபாத், தில்லியின் நடந்த முக்கிய நிகழ்வுகள் போர்த்தந்திரங்கள் தீர்ப்புகள், ஜோதிடக்குறிப்புகள் என அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும்

இதனால் தான் உலகில் 'நாட்குறிப்பின் தந்தை' என்று போற்றப்படுகிறவர் சாமுவேல் பெப்பீஸ். அவர்களை நினைவூட்டும் விதமாக, 'இந்தியாவின் பெப்பீஸ்' என்று அழைக்கப்படுகிறார்

தமிழிலக்கிய வரலாற்றில் ஆனந்த ரங்கம் பிள்ளைத் தமிழ், ஆனந்தரங்கக் கோவை, ஆனந்தரங்கன் தனிப்பாடல் என்ற ஆனந்தரங்க வரிசைகளை அறியாதவர் வெகு குறைவே எனலாம். இவரைப் பற்றி பல பாடல்கள், புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இவர் மறைந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகே இவரது நாட்குறிப்புகள் கிடைத்தன. பிரெஞ்சு அரசாங்கம் இவற்றை பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்து 8 தொகுதிகளாக வெளியிட்டது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

1736 முதல் 1753 ஆண்டு காலம் வரையிலான நாட்குறிப்புகள், தமிழில் 8 தொகுதிகளாக வந்தன. தமிழ் எழுத்துலகின் ஒரு புது இலக்கிய வடிவத்துக்கு முன்னோடியான ஆனந்த ரங்கம் பிள்ளை 51 வயதில் 10 ஜனவரி 1761ல் மறைந்தார்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்