Gold Rate Today : தாண்டவமாடும் தங்கம்.. ராக்கெட் வேகத்தில் சடசடனு ஏறி ஷாக் கொடுக்கும் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!
Gold Rate Today : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 17) சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.7,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate Today : சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை தொடர்ச்சியாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. இந்தநிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 17) சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.7,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.