இன்றைய தங்கம் விலை நிலவரம்: ’தங்கம் விலை அடிரடி குறைவு’ ஜூன் 09, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  இன்றைய தங்கம் விலை நிலவரம்: ’தங்கம் விலை அடிரடி குறைவு’ ஜூன் 09, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ’தங்கம் விலை அடிரடி குறைவு’ ஜூன் 09, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Kathiravan V HT Tamil
Published Jun 09, 2025 10:00 AM IST

ஜூன் 09 ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ’தங்கம் விலை அடிரடி குறைவு’ ஜூன் 09, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
இன்றைய தங்கம் விலை நிலவரம்: ’தங்கம் விலை அடிரடி குறைவு’ ஜூன் 09, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 09) ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.71,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.8,955-க்கு விற்பனை ஆகிறது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 08) ஒரு சவரன் தங்கம் ரூ.71,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,980-க்கு விற்பனை ஆனது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை இன்று (ஜூன் 09) ஒரு கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.118-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.118,000-க்கும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தங்கம் எனும் அறிய உலோகம்

தங்கம் வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22 காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.