Tamil Top 10 News:டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் முதல் திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு வரை - டாப் 10 நியூஸ்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News:டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் முதல் திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு வரை - டாப் 10 நியூஸ்

Tamil Top 10 News:டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் முதல் திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு வரை - டாப் 10 நியூஸ்

Karthikeyan S HT Tamil
Sep 19, 2024 07:28 PM IST

Evening Tamil Top 10 News: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலி இடங்கள் அதிகரிப்பு, ராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு, திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு உள்பட மாலை டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Tamil Top 10 News:டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் முதல் திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு வரை - டாப் 10 நியூஸ்
Tamil Top 10 News:டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் முதல் திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு வரை - டாப் 10 நியூஸ்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்களை அதிகரிப்பதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், அக்டோபர் மாதத்தின் முதல் அல்லது 2வது வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரி வந்த நிலையில் நடவடிக்கை. 20 லட்சம் பேர் எழுதியுள்ள இத்தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் தற்போது 6,724ஆக உள்ளது.

தேவநாதன் யாதவுக்கு மீண்டும் போலீஸ் காவல்

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவுக்கு மீண்டும் போலீஸ் காவல். 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி. செப்டம்பர் 23ம் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் 24 கோடி மோசடி செய்ததாக நிறுவன இயக்குனர் தேவநாதன் யாதவ், மகிமை நாதன், குணசீலன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கொட்டிய கட்டிடக் கழிவுகளை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அகற்றிட வேண்டும் என தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கூவம் ஆற்றில் தூண்கள் அமைத்து வருகிறது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் புதிய தலைவராக நவாஸ்கனி எம்.பி. தேர்வு!

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் புதிய தலைவராக நவாஸ்கனி எம்.பி. தேர்வான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அமைச்சர் செஞ்சி மஸ்தான், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கருணைத் தொகை

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத் தொகை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போலி என்.சி.சி. முகாம் நடத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், பாதிக்கப்பட்ட 23 மாணவிகள் மற்றும் 219 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு விளக்கம். வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு.

ராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

சென்னை எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஹரிஷ் (17) ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர். ஹரிஷை காப்பாற்ற சென்ற அவரது நண்பர் மோகன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் 650 பேர் பங்கேற்பு

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு நாளை தொடங்குகிறது. இதில், தமிழகத்தில் சென்னை மையத்தில் 650 பேர் தேர்வெழுதுகின்றனர்.

சீமான் கருத்து

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இங்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழிசை கடும் விமர்சனம்

திமுக நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-ம் ஆண்டு விழாவின்போது அவரது மகன் தலைமை என திமுக தொண்டர்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். கருணாநிதி குடும்பம் பிழைத்துக் கொண்டே இருக்கும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு

திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணை கலந்திருப்பது குறித்தான உறுதி செய்யப்பட்ட ஆய்வறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் வாங்கிய நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணை கலந்துள்ளதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி, லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர் வெங்கட்ராமனா ரெட்டி ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.