தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tnpsc Group 2 Exam Results Released

TNPSC Group -2: குரூப் - 2 முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

Karthikeyan S HT Tamil
Jan 11, 2024 02:21 PM IST

குரூப் - 2 முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு

ட்ரெண்டிங் செய்திகள்

அந்தவகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளில் காலியாக உள்ள பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி நடத்தியது. கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தத் தோ்வை 51 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதியுள்ளனா்.

நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன. 

இந்த நிலையில், 6,151 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-II தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் உள்ளதாகக் குறிப்பிட்டு வெளியான செய்திகள் குறித்து பின்வரும் விவரங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன. 15.12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம், 2023-ஆம் ஆண்டில் 15.03.2023 அன்று மேம்படுத்தப்பட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்