தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tneb Anouncement Three Phase Power Time

விவசாயிகளே கவனிங்க.. மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் இதோ!

Divya Sekar HT Tamil
Mar 06, 2023 11:57 AM IST

Three Phase Power : டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் குறித்த சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

விவசாயிகள்  (மாதிரிப்படம்)
விவசாயிகள் (மாதிரிப்படம்) (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு (எஸ்.எஸ்.) துணை மின் நிலையத்திலும் இரண்டு (குரூப் 1, குரூப் 2 ) பிரிவுகள் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும். (எஸ். எஸ்) குரூப் 1, குரூப் 2 இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியில் இருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

அதேபோல் இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணியில் இருந்து காலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இதைப்போலவே டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப் 2 பகுதிக்கு காலை 9.30 மணியில் இருந்து மதியம் 3.30 மணி வரைக்கும் இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து விடியற்காலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்