10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட் பார்ப்பது எப்படி, தேர்ச்சி விகிதம் விவரம் உள்ளே
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட் பார்ப்பது எப்படி, தேர்ச்சி விகிதம் விவரம் உள்ளே

10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட் பார்ப்பது எப்படி, தேர்ச்சி விகிதம் விவரம் உள்ளே

Manigandan K T HT Tamil
Published May 16, 2025 09:52 AM IST

அரசுத் தேர்வுகள் இயக்ககம் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன. tnresults.nic.in இல் ரிசல்ட்களை சரிபார்ப்பதற்கான படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட் பார்ப்பது எப்படி, தேர்ச்சி விகிதம் விவரம் உள்ளே
10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட் பார்ப்பது எப்படி, தேர்ச்சி விகிதம் விவரம் உள்ளே (canva)

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு 2.25% தேர்ச்சி விகிதம் அதிகம் என தெரியவந்துள்ளது. தேர்ச்சி விகிதம் 93.80% ஆகும்.

ரிசல்ட்டை சரிபார்க்க படிகள்

மாணவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றுவதன் மூலம் தங்கள் ரிசல்ட்டை சரிபார்க்கலாம்:

  • tnresults.nic.in இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • HSE (+1) முடிவு பக்கத்தில் கிளிக் செய்யவும்.
  • உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை சமர்ப்பிக்கவும்.
  • தமிழ்நாடு 11 ஆம் வகுப்பு முடிவைப் பாருங்கள்.
  • எதிர்கால குறிப்புக்காக அதன் பிரிண்ட் அவுட்டை பதிவிறக்கம் செய்து வைத்திருங்கள்.
  • SSLC பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 2025-ஐ கிளிக் செய்து உங்கள் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளிட்டு நீங்கள் ரிசல்ட்டை சரிபார்க்கலாம்.

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரிசல்ட் அறிவிக்கப்பட்டன.

இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 92.09% தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.13 சதவீதமாகவும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.70 சதவீதமாகவும் உள்ளது.

11 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 5 முதல் மார்ச் 27, 2025 வரை நடத்தப்பட்டது.

தேர்வு முடிவுகள் மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தனியார் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கப்பட்ட மொபைல் போன் எண்ணுக்கும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு நடைபெற்ற நாட்கள்

05.03.2025 முதல் 27.03.2025 வரை

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள்: 16.05.2025

தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணாக்கர்களின் : 8,07,098.

மாணவியர்களின் எண்ணிக்கை : 4,24,610.

மாணவர்களின் எண்ணிக்கை : 3,82,488.

தேர்ச்சி விவரங்கள்

தேர்ச்சி பெற்றவர்கள் : 7,43,232 (92.09 %).

மாணவியர் 4,03,949 (95.13 %) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் 3,39,283 (88.70 %) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களை விட 6.43 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 11,025.

இதனிடையே, “இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தை அடிச்சிக்க ஆளே கிடையாது” என முறைகேடு புகார்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்தார்.