ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - மூத்த அரசியல் தலைவர்கள் இரங்கல், கட்சி அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் பறந்த கொடி
தமிழ்நாட்டின் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - மூத்த அரசியல் தலைவர்கள் இரங்கல், கட்சி அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் பறந்த கொடி, மற்றும் அது குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - மூத்த அரசியல் தலைவர்கள் இரங்கல், கட்சி அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் பறந்த கொடி
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.
யார் இந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?:
தந்தை பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன்தான், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆவார். இவர் சென்னை மாநில கல்லூரியில் படித்த காலத்தில் மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்தார். அதனைத் தொடர்ந்து 1984-ல் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
2004 மக்களவைத்தேர்தலில் கோபி. மக்களவைத் தொகுதியில் வென்று, 2009 வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய இணையமைச்சராக செயலாற்றினார், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
