தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tn Health Dept To Hold 1000 Fever Camps On March 10, Says Ma Subramanian

Influenza virus: இதை பின்பற்றினாலே காய்ச்சல் வராது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Karthikeyan S HT Tamil
Mar 06, 2023 05:47 PM IST

வரும் 10ஆம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்," செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் ரூ.5.23 கோடி செலவில் 16 மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முதல்வரின் உத்தரவின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மிக விரைவில் இவை திறந்து வைக்கப்படும்.

நாடு முழுவதும் எச்2என்2 இன்புளுயன்சா வைரஸ் பரவி வருகிறது. இது நான்கு நாட்கள் வரை காய்ச்சல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஐ.சி.எம்.ஆர். வெளியிட்ட வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே இந்த வைரஸ் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். மேலும், வரும் 10ஆம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. அதில் சென்னையில் மட்டும் 200 இடங்களில் நடைபெற உள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று அமைச்சர் கூறினார்.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்