தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tn Govt. Jobs Notification For Senior Consultant In Social Welfare Commission

TN Govt. Jobs: கம்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ. 75 ஆயிரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 19, 2024 11:50 AM IST

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சீனியர் ஆலோசகராக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை மாவட்டம் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள இரண்டு சீனியர் ஆலோசகருக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு ஓர் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளது. இதற்கு ஆர்வம் உள்ளவர்கள் ஜனவரி 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சீனியர் ஆலோசகர் ஐடிி, சீனியர் ஆலோசகர் அக்கவுண்ட்ஸ் ஆகிய இரு பதிவிகளுக்கு தலா ஒருவர் என இரண்டு பேர் நிரப்பபடவுள்ளன.

கல்வி தகுதி

அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகங்கள் அல்லது கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒன்றில் சிஏ/சிஎஸ்/சிஎம்ஏ அல்லது MBA பைனான்ஸ் பயின்றிருக்க வேண்டும்.

அதே போல் ஐடி வேலைக்கு எம்சிஏ, பிஇ/பி. டெக்/ எம்எஸ்சி கம்யூட்டர் சயின்ஸ்/இடி படித்திருக்க வேண்டும்.

சம்பளம் மற்றும் வயசு வரம்பு

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 75 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 35க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://chennai.nic.in/ என்ற இணையத்தளத்தில் விண்மப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதன் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் ஜனவரி 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள்,

மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை - 60001

என்ற முகவரிக்கு அனுப்பவோ அல்லது நேரடியாக வந்து சமர்பிக்கவோ செய்யலாம்.

மேலும், chndswosouth@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பலாம்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்