VengaiVayal: வேங்கை வயல் வழக்கு.. மனிதக் கழிவு கலந்த நீரை குடித்திருக்க வாய்ப்பில்லை.. தமிழக அரசு வழக்கறிஞர் தாக்கல்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vengaivayal: வேங்கை வயல் வழக்கு.. மனிதக் கழிவு கலந்த நீரை குடித்திருக்க வாய்ப்பில்லை.. தமிழக அரசு வழக்கறிஞர் தாக்கல்

VengaiVayal: வேங்கை வயல் வழக்கு.. மனிதக் கழிவு கலந்த நீரை குடித்திருக்க வாய்ப்பில்லை.. தமிழக அரசு வழக்கறிஞர் தாக்கல்

Marimuthu M HT Tamil
Feb 01, 2025 07:01 PM IST

Vengai vayal: வேங்கை வயல் வழக்கு.. மனிதக் கழிவு கலந்த நீரை குடித்திருக்க வாய்ப்பில்லை.. தமிழக அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார்.

Vengai vayal: வேங்கை வயல் வழக்கு.. மனிதக் கழிவு கலந்த நீரை குடித்திருக்க வாய்ப்பில்லை.. தமிழக அரசு வழக்கறிஞர் தாக்கல்
Vengai vayal: வேங்கை வயல் வழக்கு.. மனிதக் கழிவு கலந்த நீரை குடித்திருக்க வாய்ப்பில்லை.. தமிழக அரசு வழக்கறிஞர் தாக்கல்

வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கில், சம்பவத்தின்போது மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் இருந்த மனிதக் கழிவு கலந்த நீரை யாரும் குடித்திருக்க வாய்ப்பில்லை என்றும்; வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் யாரும் இல்லை எனவும், சிபிசிஐடி முறையாக வேங்கை வயலில் நடந்த சம்பவத்தை விசாரித்துள்ளதாகவும், வேங்கை வயல் வழக்கில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ளார்.

இவ்வழக்கு வரும் 3ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயலில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை புதிய திருப்பத்தைச் சந்தித்து இருக்கிறது.

சிபிசிஐடி தரப்பில் தாக்காலான குற்றப்பத்திரிகை குறித்து பாதிக்கப்பட்டோர் புகார்

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயலில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கின்றனர். அதில் மூவர் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கு சிபிசிஐடி தரப்பில் தாக்கலான குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும், அதனால் அதனை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ், மனு தாக்கல் செய்து இருந்தார்.

மேலும், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பவானி மோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவைச்சேர்ந்த கார்வேந்தன் உள்ளிட்டோரும் அவரின் வழக்கில் ஆஜராகினர்.

அப்போது பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞருக்கும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் இடையில் நீதிபதி முன்பு கடும் வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பவானி மோகன் வாதாடும்போது, ‘நாட்டில் எண்ணற்ற பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு வேங்கை வயல் ஓர் உதாரணம் ஆகியிருக்கிறது. சிபிசிஐடி தாக்கல் செய்த மனுவில் எக்கச்சக்க ஏராளமான குளறுபடிகள் இருக்கின்றன. எனவே, அதை சட்டப்படி ஏற்காதீர்கள். மேலும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நீக்கியதை புகார்தாரருக்கு கூறவில்லை’ என வாதிட்டார்.

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நீக்கியதை தெரியப்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா - நீதிபதி

அப்போது நீதிபதி, அரசு தரப்பு வழக்கறிஞரை பார்த்து, ‘ நீங்கள் ஏன் இந்த வேங்கை வயல் வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கியதை புகார்தாரருக்கு கூறவில்லை. அதை தெரியப்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதைக்கேட்டுக்கொண்டபின் பதில் தந்த அரசு தரப்பு வழக்கறிஞர், ’இந்த வழக்கு தொடர்பாக, தகவல் சொல்வதற்கு மூன்று முறை அனுப்பியிருந்தோம். ஆனால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் தரப்பில் அவர்கள் வரமுடியவில்லை என எழுத்துப்பூர்வ கடிதத்தை சமர்ப்பித்து இருந்தனர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் பட்டியல் இனத்தவர்கள். மாற்று சாதியினர் கிடையாது. அதனால் இந்த வழக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது’ என தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

மேலும், அவர், வேங்கை வயலில் மனிதக்கழிவு கலந்த குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை யாரும் குடித்திருக்க வாய்ப்பே இல்லை. முன்பே, உடல் நலம் பாதிக்கப்பட்டதாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். 

மேலும், அவர்கள் இந்த நீரை குடிக்கவே இல்லை. அதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என வாதிட்டார். இந்நிலையில் இரண்டு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி வசந்தி அவர்கள், வரக்கூடிய பிப்.3ஆம் தேதி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.