Pongal Gift: பொங்கல் பரிசு வாங்காத சுமார் 4.40 லட்சம் பேர்...வெளியான தகவல்
பொங்கலுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ. 1000 பரிசு தொகையை சுமார் 4,39, 669 லட்சம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு சுமார் ரூ. 44 ஆயிரம் கோடி பணம் திரும்பி வந்துள்ளது.
2023ஆம் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 1000, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. இந்த பொங்கல் பரிசானது கடந்த 9ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் 4 லட்சத்துக்கு 39 ஆயிரத்து 669 பேர் பொங்கல் பரிசு தொகையை வாங்கவில்லை என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுதுறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொங்கல் பரிசுத்தொகையை பொறுத்தவரை சென்னை மாவட்டத்தில் வடசென்னையில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 728 குடும்ப அட்டைதாரர்கள், தென் சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 552 குடும்ப அட்டைதாரர்களும் ரூ. 1000 பரிசு தொகை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதில் வட சென்னையில் 9 லட்சத்து 83 ஆயிரத்து ஐந்து பேரும், தென் சென்னையில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 14 ஆயிரத்து பதினான்கு பேரும் பொங்கல் பரிசை வாங்கியுள்ளனர். அதன்படி, வட சென்னையில் 72, 335 குடும்ப அட்டைதாரர்களும், தென் சென்னையில் 49, 538 குடும்பை அட்டைதாரர்களும் பரிசு தொகை வாங்கவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8, 026, செங்கல்பட்டு மாவட்டத்தில் 10, 263, திருவள்ளூர் மாவட்டத்தில் 8, 874 அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகையை வாங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் 2 கோடி 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வைக்கப்பட்டிருந்தது.
இதில், தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்கவில்லை. இதனால் ரூ. 43 கோடி 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் அரசுக்கு திரும்பி வந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.