Tamil Top 10 News: பிரதமரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் முதல் 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல் வரை - டாப் 10 நியூஸ்!
Tamil Top 10 News: பிரதமரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், மினி பஸ் கவிந்து விபத்து, 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல் உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
Afternoon Tamil Top 10 News: தமிழகம் முழுவதும் நிகழ்ந்த அரசியல் முக்கிய நிகழ்வுகள் உள்பட அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
பிரதமரை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பு தொகையை வழங்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் சமக்ர சிக்க்ஷா திட்டத்திற்காக வழங்கப்பட வேண்டிய நிதியினை விரைந்து வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்து, இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
லாரிக்குள் கார்
நாமக்கல் அருகே பிடிபட்ட கண்டெய்னர் லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பதிவு எண் இல்லாத ஹுண்டாய் கிரெட்டா கார் இருந்தது கண்டுபிடிப்பு. ▪️. கண்டெய்னரை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கும்பல் தாக்கியதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கொள்ளையன் உயிரிழப்பு
தமிழ்நாடு போலீசார் அதிரடி!
கேரளாவில் ATM-களில் கொள்ளையடித்த கும்பல் தப்பிய கண்டெய்னர் லாரி, நாமக்கல் அருகே பிடிபட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒரு கொள்ளையன் உயிரிழப்பு. இருவர் பிடிபட்டனர். போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒரு கொள்ளையன் உயிரிழப்பு. இருவர் பிடிபட்டனர்,
மினி பஸ் கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.மம்சாபுரம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற மினி பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.மம்சாபுரம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற மினி பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,100க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.102க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லையில் மேலும் ஒரு சோலார் பேனல் தொழிற்சாலை!
நெல்லையில் கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.1,260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைகிறது. நெல்லையில் கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.1,260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைகிறது. இங்கு 3 ஜிகா வாட் சோலார் பேனல்களை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டம். சுற்றுச்சூழல் அனுமதி கோரி விக்ரம் சோலார் நிறுவனம் விண்ணப்பம். ஏற்கனவே கங்கைகொண்டானில் டாடா நிறுவனத்தில் சோலார் ஆலை செயல்பட்டு வருகிறது
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை தேவை - இபிஎஸ்
சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் கைதான ஜாபர் சாதிக் சம்பாதித்த பல ஆயிரம் கோடி ரூபாயில் யார் யாருக்கு பங்கு உள்ளது? யார் யார் சினிமா தயாரித்தார்கள்? என்று ஆதாரங்களுடன் தெரிந்திருந்தும் சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தொடர் நடவடிக்கைகள் எடுக்காதது ஆச்சரியத்தை அளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோடநாடு கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்குள் ரேஷனில் இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
112 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதே போன்று நான்கு முறை ஆஸ்திரேலியாவிற்கு போதைப் பொருட்களை கடத்தியது கண்டுபிடிப்பு. சோதனையின் போது குற்றவாளிகள் பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் மற்றும் 3.9 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
டாபிக்ஸ்