தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tn Cm Mk Stalin Inaugurate Tn Global Investors Meet 2024 In Chennai

TNGIM 2024: தமிழ்நாட்டில் குவியும் நிறுவனங்கள்..லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பு உறுதி!

Karthikeyan S HT Tamil
Jan 07, 2024 11:40 AM IST

Global Investors Meet 2024: சென்னையில் உள்ள வா்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தாா்.

சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

ட்ரெண்டிங் செய்திகள்

வரவேற்புரை ஆற்றிய தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, "நாட்டிலேயே இரண்டாவது பொிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மின்வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பல பிாிவுகளில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள உழைக்கும் மகளிாில் 43% தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள். 250 மக்களுக்கு ஒரு மருத்துவா் இருக்கிறாா். அனைவரையும் உள்ளடக்கிய சமூக-பொருளாதார கொள்கையே இதற்கு காரணம் எனக் குறிப்பிட்டாா்.

மாநாட்டு விழா மேடையில், மத்திய அமைச்சருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பாராம்பரிய அடையாளமாக ஜல்லிக்கட்டு காளையும், வீரரும் கொண்ட சிலை வடிவ பரிசு விருந்தினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஹுண்டாய் இந்திய பிரிவி தலைவா் உன் சோ கிம் நிர்வாக அதிகாரி பேசுகையில், ஹுண்டாய் நிறுவனம் தமிழத்துடன் 6 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தாா்.

அப்போது, 'வணக்கம்' என தமிழில் பேசிய அவர், ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களை தமிழகத்தில் தயாரிப்பதற்கான ஆலையை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்திற்கும், ஹூண்டாய் நிறுவனத்திற்கும் நீண்ட கால தொழில் உறவு உள்ளதாகவும் உன் சோ கிம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கடந்தாண்டு ரூ.20,000 கோடி செய்த ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அவா் அறிவித்துள்ளாா்.

செங்கல்பட்டில் சிந்த்தால் சோப் உற்பத்தி ஆலையை கோத்ரெஜ் தொடங்க உள்ளது. 515 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் இந்த ஆலையில் 50 சதவீதம் பெண்களுக்கும், 5 சதவீதம் மாற்று பாலின பணியாளா்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் நிஷாபா கூறியுள்ளாா்.

இதனிடையே, கிருஷ்ணகிரியில் உள்ள தனது எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையை ரூ.12,082 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்கிறது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். இதன்மூலம் 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பார்க்கப்படுகிறது.

செங்கல்பட்டில் அமைந்துள்ள தங்களின் உற்பத்தி ஆலையை ரூ.1000 கோடிக்கு விாிவாக்கம் செய்கிறது பெகட்ரான் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம். இதன் மூலம் 8000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் JSW நிறுவனம் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தொழிற்சாலையை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், 6600 பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் ரூ.5000 கோடி முதலீடு செய்கிறது டிவிஎஸ் குழுமம். இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தொிவிக்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தற்போது வரை..!

ஹூண்டாய் நிறுவனம் - ரூ.6180 கோடி கூடுதல் முதலீடு

அமெரிக்காவின் First Solar நிறுவனம் - ரூ.5600 கோடி முதலீடு

கோத்ரேஜ் நிறுவனம் - ரூ.515 கோடி முதலீடு

டாடா எலக்ட்ரானிக்ஸ் - ரூ.12,082 கோடி முதலீடு (40,500 பேருக்கு வேலைவாய்ப்பு)

பெகட்ரான் - ரூ.1000 கோடி முதலீடு (8000 பேருக்கு வேலைவாய்ப்பு)

JSW நிறுவனம் - ரூ.10,000 கோடி முதலீடு (6600 பேருக்கு வேலைவாய்ப்பு)

TVS குழுமம் - ரூ.5000 கோடி முதலீடு

மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் - ரூ.200 கோடி முதலீடு

WhatsApp channel