Chennai Rains: சென்னையில் கனமழை எதிரொலி - களத்தில் இறங்கி ஆய்வு செய்த முதலமைச்சர்; அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு
சென்னையில் கனமழை எதிரொலி காரணமாக முதலமைச்சர் மழைநீரில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.
சென்னையில் கனமழை, புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அரசு அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.
சென்னையில் நேற்று இரவுமுதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில் 62.4 மி.மீ, அம்பத்தூரில் 54.3 மி.மீ மழையும் பெய்துள்ளது. அதுமட்டுமின்றி தியாகராயநகர், கொரட்டூர் ஆகிய இடங்களிலும் மழை நீர் வடிய வழியில்லாமல் இருக்கிறது.
இதனை ஒட்டி, மழையில் தத்தளிக்கும் மக்களுக்கு உதவ முதலமைச்சர் உத்தரவிட்டதின் பேரில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளூர் நிர்வாகிகள் களப்பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே சென்னை ரிப்பன் மாளிகைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பேரிடர் மீட்புக்குழுவினரைச் சந்தித்து மீட்பு உபகரணங்களைப் பார்வையிட்டார். மேலும் சென்னை மாநகராட்சி அலுவலகத்திலுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துக்குச் சென்று கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நீரை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார். அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா, சென்னை துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மற்றும் பல உயர் அலுவலர்கள் இருந்தனர்.
அப்போது, நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும்; மின்தடை ஏற்படும் இடங்களில் மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி, மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அரசு அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்னும் இரண்டு நாட்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் மீண்டும் சென்னையில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்ட நிலையில் மழை நீர் தேங்கிய இடங்களில் அதனை வெளியேற்றுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும்; எதற்கும் அதிகாரிகள் தயார்நிலையில் இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.