Tamil News  /  Tamilnadu  /  Tn Cable Tv Is All Set To Free Telecast The Fifa World Cup 2022
அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்

FIFA 2022: அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம்: அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

24 November 2022, 18:09 ISTKarthikeyan S
24 November 2022, 18:09 IST

சென்னை: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.

கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக கருதப்படும் 22-வது பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20 ஆம் தேதி முதல் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த 4 நாட்களில் இரண்டு முன்னாள் சாம்பியன்கள் முதல் ஆட்டத்திலே தோல்வி அடைந்துள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

கால்பந்து ஜாம்பவான் என கருதப்படும் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா 1-2 என்ற கோல் கணக்கில் செளதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதேபோல், நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனி அணியை ஜப்பான் வீழ்த்தியது. இப்படி பரபரப்பாக நடந்து வரும் கால்பந்து ஆட்டத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 32 அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்த கால்பந்து தொடர் டிசம்பர் 18ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்களுக்கு உற்சாகமாக நடைபெற இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தியாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் கூடுதல் கட்டணமின்றி இலவசமாக பார்க்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

டாபிக்ஸ்