தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’தென் தமிழக வளர்ச்சிக்காக ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்’ தங்கம் தென்னரசு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’தென் தமிழக வளர்ச்சிக்காக ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்’ தங்கம் தென்னரசு

தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’தென் தமிழக வளர்ச்சிக்காக ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்’ தங்கம் தென்னரசு

Kathiravan V HT Tamil
Published Mar 14, 2025 11:19 AM IST

சென்னைக்கு அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான விரைவுபடுத்தப்பட்டுள்ளன என பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளர்.

தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’தென் தமிழக வளர்ச்சிக்காக ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்’ தங்கம் தென்னரசு
தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’தென் தமிழக வளர்ச்சிக்காக ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்’ தங்கம் தென்னரசு

திமுக அரசின் 4வது பட்ஜெட்

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. 2023 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தென்னரசுவின் இரண்டாவது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசின் 4வது பட்ஜெட் இதுவாகும். நாளைய தினம் வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 17-ம் தேதி தொடங்குகிறது.

மேலும் படிக்க:- தமிழ்நாடு பட்ஜெட்: ’ஈட்டிய விடுப்பு முதல் பத்திரப்பதிவு தள்ளுபடி வரை’ கடைசி நேரத்தில் தங்கம் தென்னரசு சொன்ன 4 அறிவிப்பு

தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் 

தமிழ்நாடு பட்ஜெட்டை வாசித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், மகளிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடு. இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது.  இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர் என தெரிவித்தார். 

தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்புகள்

  • 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு.
  • பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும்.
  • தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்.
  • அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். 
  • ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும். மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

உட்கட்டமைப்பு திட்டங்கள் 

  • கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்.
  • கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு.
  • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு.
  • 100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்.
  • சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
  • திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும்.
  • அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

தொழிற்துறை அறிவிப்புகள்

தமிழ்நாட்டில் செமி கண்டெக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும். கோவை மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் தொழிற் பூங்கா அமைக்கப்படும்.

மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும்.

திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும்.

மேலும் படிக்க:- தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’உரிமை தொகை கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்!’ தங்கம் தென்னரசு வெளியிட்ட ’நச்’ அறிவிப்பு!

ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம்

ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலையங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை நன்கு உணர்ந்த இந்த அரசு, சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு உரிய நிலங்களைக் கையகப்படுத்தி, 2,938 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

 மேலும், சேலம் விமான நிலையத்திற்கென 350 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னைக்கு அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தென் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார். 

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.