தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’உரிமை தொகை கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்!’ தங்கம் தென்னரசு வெளியிட்ட ’நச்’ அறிவிப்பு!
இதுவரை மகளிர் உரிமை தொகை பெறாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 13 ஆயிரத்து 807 கோடி ரூபாய் நிது ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை மகளிர் உரிமை தொகை பெறாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.
2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி முறைகேடு புகார் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
திமுக அரசின் 4வது பட்ஜெட்
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. 2023 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தென்னரசுவின் இரண்டாவது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசின் 4வது பட்ஜெட் இதுவாகும். நாளைய தினம் வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 17-ம் தேதி தொடங்குகிறது.
மேலும் படிக்க:- தமிழ்நாடு பட்ஜெட்: ’ஈட்டிய விடுப்பு முதல் பத்திரப்பதிவு தள்ளுபடி வரை’ கடைசி நேரத்தில் தங்கம் தென்னரசு சொன்ன 4 அறிவிப்பு
விடியல் பயணம்
மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் விடியல் பயணம் திட்டத்திற்கு முதல்வர் முதல் கையெழுத்திட்டார். தினமும் சராசரியாக 50 லட்சம் மகளிர் பேருந்துகளில் இதுவரை 642 கோடி பயணங்களை மேற்கொண்டு உள்ளனர். இதனால் மகளிர் மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் சேமிக்க முடிகிறது என மாநில திட்டக் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளது. இத்திட்டத்திற்காக மானியத் தொகை 3600 கோடி ரூபாயை 2025-26 ஆம் ஆண்டு வரசு செலவு திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கி உள்ளது.
மகளிர் உரிமை தொகை
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இது அன்றாட வாழ்கைக்கு பேருதவியாகவும், சேமிக்கவும் வழிவகை செய்கிறது. இதுவரை மகளிர் உரிமை தொகை பெறாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 13 ஆயிரத்து 807 கோடி ரூபாய் நிது ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
புதுமை பெண் திட்டம்
மூவலூர் ராமாமிருதம் அம்மையார் நினைவு புதுமை பெண் திட்டத்தின் கீழ் 4.6 லட்சம் மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். இதனால் உயர்கல்வியில் சேறும் மாணவியர் எண்ணிக்கை கடந்த கல்வியாண்டில் 19 சதவீதம் அதிகரித்து 40,276 மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர். இதற்கு வரும் நிதியாண்டில் 420 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க:- தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’உரிமை தொகை கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்!’ தங்கம் தென்னரசு வெளியிட்ட ’நச்’ அறிவிப்பு!
மகளிர் சுய உதவிக் குழுக்கள்
மகளிர் சுய உதவி குழு திட்டம் மகளிர் வாழ்வை மேம்படுத்துகிறது. மகளிரை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 7.76 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகிறது. 10 ஆயிரம் புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். 37 ஆயிரம் கோடி அளவில் வங்கி கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தோழி மகளிர் விடுதிகள்
எதிர்வரும் நிதியாண்டில் தோழி பணிபுரியும் மகளிர் விடுதிகள் காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட மேலும் 10 இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும். மாவட்டம் தோறும் தோழி விடுதிகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை, கோவை, மதுரையில் ஆயிரம் மாணவியர் தங்கும் வகையில் 3 மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.
ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்
மூன்றாம் பாலினத்தவரை போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக்காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் உரிய பயிற்சிகள் வழங்கி ஊர்க்காவல் படையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 50 மூன்றாம் பாலினத்தவர்களை கொண்டு சென்னை, தாம்பரம், ஆவடியில் செயல்படுத்தப்படும்.

டாபிக்ஸ்