தமிழ்நாடு பட்ஜெட் 2025: ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல்! பேரவையில் அதிமுக அமளி! சபாநாயகருடன் ஈபிஎஸ் வாக்குவாதம்!
2017ஆம் ஆண்டில் உங்கள் ஆட்சியில் நடந்த விதிகள் அடிப்படையில் பேரவை நடப்பதாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசுவது எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது என்றும் கூறினார்.

2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி முறைகேடு புகார் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
திமுக அரசின் 4வது பட்ஜெட்
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. 2023 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தென்னரசுவின் இரண்டாவது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசின் 4வது பட்ஜெட் இதுவாகும். நாளைய தினம் வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 17-ம் தேதி தொடங்குகிறது.
மேலும் படிக்க:- தமிழ்நாடு பட்ஜெட்: ’ஈட்டிய விடுப்பு முதல் பத்திரப்பதிவு தள்ளுபடி வரை’ கடைசி நேரத்தில் தங்கம் தென்னரசு சொன்ன 4 அறிவிப்பு
நாட்டின் 2ஆவது பெரிய பொருளாதாரம்
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நாட்டிற்கே முன்னோடியாக திகழும் சட்டப்பேரவை முன் வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்திய திருநாட்டின் 2ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக மதிப்பிடப்படும் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திடும் வகையில் வரவு செலவு திட்டத்தை உருவாக்க ஆலோசனை தந்த முதலமைச்சருக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
காலத்தை வென்ற ஐயன் திருவள்ளுவர் வாக்கினை இம்மாமன்றத்தில் பதிவு செய்து என் உரையை தொடங்குகிறேன்.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.
சமநிலையில் நின்று பொருளின் எடையை சீர்த்தூக்கி காட்டும் துலாக்கோல் போல் எப்பக்கமும் சாயாமல் நடுநிலை பேணுவது சான்றோர்க்கு அழகு என தங்கம் தென்னரசு பேசினார்.
மேலும் படிக்க:- தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’உரிமை தொகை கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்!’ தங்கம் தென்னரசு வெளியிட்ட ’நச்’ அறிவிப்பு!
அதிமுகவின வாக்குவாதம்
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து உள்ளதாக நேற்றைய தினம் அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக விவாதிக்க கோரி சட்டப்பேரவையில் அதிமுகவினர் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கையை முன் வைத்தார். இதனால் சிறிது நேரம் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
2017ஆம் ஆண்டில் உங்கள் ஆட்சியில் நடந்த விதிகள் அடிப்படையில் பேரவை நடப்பதாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசுவது எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது என்றும் கூறினார்.

டாபிக்ஸ்