தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tn Budget 2024: Tamil Nadu Government's Budget Is Like Mirage - Aiadmk General Secretary Eps Comments

TN Budget 2024: ’கடன் வாங்குவதில் நெம்பர் ஒன்!’ பட்ஜெட்டை கலாய்க்கும் ஈபிஎஸ்!

Kathiravan V HT Tamil
Feb 19, 2024 02:44 PM IST

”TN Budget 2024: இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நெம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதிமுக ஆட்சியை விட தமிழ்நாடு அரசுக்கு அதிக வருமானம் வருகிறது. ஆனால் எந்த பெரிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை”

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

ட்ரெண்டிங் செய்திகள்

கிராமபுற சாலைகளை சீர் செய்ய வெறும் ஆயிரம் கோடி ரூபாய்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் நிதி பற்றாக்குறை ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி என சொல்லப்பட்டுள்ளது. 

விடியா திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி ரூபாய் கடன் உள்ளது. 2021ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடன் உயர்ந்துள்ளது. கடனை சரி செய்ய ஒரு குழு அமைத்தார்கள். இப்போது அந்த குழுவை அமைக்க ஒரு குழு போட வேண்டி உள்ளது. 

இந்த பட்ஜெட்டில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், ’இது ஒரு கானல் நீர்; மக்களுக்கு பலன் தராது’ ஆட்சிக்கு வருவதற்கு முன் அதிமுக அரசு கடன் வாங்கி அதிக சுமை தந்துவிட்டது என கூறினார்கள். 

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நெம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதிமுக ஆட்சியை விட தமிழ்நாடு அரசுக்கு அதிக வருமானம் வருகிறது. ஆனால் எந்த பெரிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை.  

எல்லா நிதி நிலை அறிக்கையிலும் பேருந்து வாங்கப்படும் என்றுதான் சொல்வார்கள், இது காகிதத்தில்தான் இருக்கும், நடைமுறைக்கு வராது. 

நாங்கள் ஆட்சிக்கு வரும்போது மட்டும் பாஜக அரசு என்ன அள்ளிக்கொடுத்துவிட்டார்களா?, அப்போதும் இதே நிலைமைதான். 

அதிமுக ஆட்சியில் உயர்க்கல்வியில் 2035ஆம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை, 2019ஆம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம். 

தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதன் முதலில் நடத்தியதே அதிமுக அரசுதான், திமுக ஆட்சிக்கு பிறகு எத்தனை தொழில் வந்துள்ளது, எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை. 

IPL_Entry_Point