தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tn Budget 2023: New Flyover Between Saidapet - Thenampet - Finance Minister Ptr Palanivel Thiagarajan's Announcements

நந்தனம் சிக்னலுக்கு குட் பை! சென்னைவாசிகள் வயிற்றில் பாலை வார்த்த பிடிஆர்

Kathiravan V HT Tamil
Mar 20, 2023 11:43 AM IST

TN Budget 2023: சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும் என்ற புதிய அறிவிப்பினை பிடிஆர் வெளியிட்டுள்ளார்.

நந்தனம் போக்குவரத்து சிக்னல்
நந்தனம் போக்குவரத்து சிக்னல்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது.

இதனிடையே இன்று திமுக அரசு தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூன்றாவது முறையாக இந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அறிவிப்புகள் குறித்து அவர் கூறுகையில், 621 கோடி மதிப்பீட்டில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும் என்ற புதிய அறிவிப்பினை பிடிஆர் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் சென்னையின் பிராதான சாலையான அண்ணாசாலையில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை மேம்பாலம்
சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை மேம்பாலம்

ஒரு கோடி பேர் வசிக்கும் சென்னை நகரில் அதிகம் பேர் பயன்படுத்தும் சாலையாக அண்ணாசாலை உள்ளது. கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தி.நகர், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, வாலாஜாசாலை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் உள்ள அண்ணாசாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட சிக்னலாக நந்தனம் தேவர் சிலை சிக்னல் உள்ளது.

நந்தனம் சிக்னலில் வாகனங்கள் கடந்து செல்ல 15 முதல் 20 நிமிடங்களும், பீக் அவர்ஸ்களில் அரைமணி நேரத்தை கடந்தும் வாகனவோட்டிகள் காத்திருந்து கடக்க வேண்டிய நிலை உள்ளது.

 

நந்தனம் போக்குவரத்து நெரிசல்
நந்தனம் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் தொடக்கம் முதலே பல்வேறு மேம்பாலங்களை கட்டிய திமுக அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வாகன ஓட்டிகளிடம் இருந்து எழுந்த நிலையில் புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசு மேம்பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கிய நிலையில் தற்போது நிதி ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளது.

IPL_Entry_Point