Viral Video: 'ராமரை தூக்கி விட்டு முருகன்'.. அண்ணாமலை செயலால் திடீர் பரபரப்பு!
Annamalai: ராமரை தூக்கி விட்டு, அந்த இடத்தில் முருகன் படத்தை வைத்து வழிபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை செயலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அமைந்தகரையில் பாஜகவின் நாடாளுமன்ற தேர்தலுக்கான மாநில தலைமை அலுவலக திறப்பு விழா நடந்தது. பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று, அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப் பட்டுள்ளது. இன்டர்நெட், கூட்ட அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் பாஜக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
அப்போது, முகப்பில் ராமர் போட்டோ வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பூஜை செய்து நிகழ்ச்சியை தொடங்கினார் அண்ணாமலை. அந்த நேரத்தில் முருகன் போட்டோ கொஞ்சம் தூரத்தில் இருந்தது. உடனே ராமர் போட்டோவை அந்த இடத்தில் இருந்து நீக்கிய அண்ணாமலை, முருகன் போட்டோவை எடுத்து அந்த இடத்தில் வைத்தார். அத்துடன், முருகன் போட்டோவை வழிபாடு செய்தார். அதன் பின்பாக ராமரை வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, '2024 நாடாளுமன்ற தேர்தல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிமனையை திறந்துள்ளோம். வரும் பிப்வரி 11ஆம் தேதி ‘என் மக்கள் என் மக்கள்’ யாத்திரையின் 200ஆவது தொகுதியாக சென்னையை தேர்தெடுத்துள்ளோம். ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை பிப்.25ஆம் தேதி பல்லடத்தில் நிறைவடைவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் அவரது தலைமையில் எழுச்சி மிக்க மாநாடு நடத்தப்படும்.
கோவை தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளாக பிரதமர் மோடி வரவில்லை. எனவே பிரதமர் செல்லாமல் இருக்கக்கூடிய புதிய பகுதியான பல்லடத்திற்கு பிரதமரை அழைத்துச் செல்ல வேண்டும் என இதனை ஏற்பாடு செய்துள்ளோம். அனைத்து கட்சிகளுக்கும் பலம், பலவீனம் இருக்கும். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை என்பது எளிதான ஒன்றல்ல, கடினமான ஒன்று. யாரெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களெல்லாம் பாஜக கூட்டணியில் சேரலாம். இந்த மாத இறுதிக்குள் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும்." என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்