"என்னை திருத்திக்கொள்ளமாட்டேன்" மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை பேச்சு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  "என்னை திருத்திக்கொள்ளமாட்டேன்" மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை பேச்சு

"என்னை திருத்திக்கொள்ளமாட்டேன்" மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 08, 2023 06:11 AM IST

Annamalai Press Meet: ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க பெரியகுளம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் காரசாரமாக பேசியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு
மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக தற்போது வந்துள்ளேன். பல திராவிட கட்சிகளின் வளர்ச்சிக்கு பாஜக உதவுகிறது.

அண்ணாமலை இங்கு தோசை இட்லி சப்பாத்தி சுடுவதற்காக வரவில்லை. எப்போதும் எனது தலைமை பண்பு என்பது ஒரு மேனேஜர் போல இருக்காது. ஒரு கட்சியின் தலைவன் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி தான் நான் இருப்பேன்.

பாஜகவை பொறுத்தவரை தெளிந்த நீரோடையாக ஓடிக் கொண்டிருக்கிறது. குளத்திலிருந்து ஒரு நீர் கூட வெளியேறக்கூடாது என நினைத்தால் அது சாக்கடையாக மாறிவிடும்.

டெல்லியில் நம்மை பற்றி இப்படி கூறிவிடுவார்களோ. நம்மை பற்றி போட்டுக்கொடுத்துவிடுவார்களா? இதையெல்லாம் பார்த்தவன் நான். அதனால் இதற்கெல்லாம் கவலைப்படப்போவது கிடையாது. அதனால் பாஜக இருப்பை தக்க வைக்கும் வரை இந்த அதிர்வுகள் நடந்துகொண்டே தான் இருக்கும்.

தமிழக அரசியல் சரித்திரத்தில் என்னை போல் தாக்கப்பட்ட தலைவர்கள் யாரும் இல்லை. என் அரசியல் இப்படிதான் இருக்கும். வேண்டாம் என்றால் என்னை ஒதுக்கிவிட்டு அரசியல் நடத்துங்கள்.

இன்னைக்கு திமுக பத்திரிகை திறந்து பார்த்தால் கண்டிப்பாக நான் இருப்பேன். இவ்வளவு நாள்களாக போலீசார் நடுநிலையாக இருந்தார்கள். தற்போது அவர்கள் ஒரு பக்கம் சாய்ந்து இருக்கிறார்கள். என்னை பற்றி அவதூறு எழுதி வருவது டிரெய்லர் தான். இன்னும் மோசமாக எழுதுவார்கள்.

எந்த நிலையிலும் என் வேகம் குறையாது.எம்எல்ஏ, எம்பி, சிஎம் என பதவிக்காக நான் வரவில்லை. பாஜக ஆட்சி கட்டிலில் ஏற வேண்டும். அதற்காகதான் வந்துள்ளேன். யார் அழைத்து கூறியும் என்னை திருத்திக்கொள்ளமாட்டேன். தொண்டர்களுக்காக, இந்த கட்சிக்காக ஆட்சிக்கட்டிலிலே அமரவைக்கவேண்டிய கடமை எனக்கு உள்ளது. அதை செய்தே ஆக வேண்டும்.

தமிழை முதன்மைப்படுத்தி தான் தமிழகத்தில் அரசியல் நடத்த வேண்டும். புதுவித அரசியல் கொண்டு வருவதற்கு பாஜகவால் மட்டும் தான் முடியும். தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்காக மட்டும்தான் பாஜக இருக்கிறது. புதிதாக எந்தவொரு பிரச்னையும் உருவாக்குவதற்கு இல்லை.

பாஜக 420 கட்சி என கூறுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது. அவரை பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீட்டை பத்தி பேசும் உதயநிதிக்கு, நீட் ஃபார்முலா தெரியுமா? ஏப்ரல் 14ஆம் தேதி வெப்சைட் வெளியாகிறது. அதில் அமைச்சர்களின் ஊழல் வெளிவரும்.

போக்குவரத்து துறை தனியாருக்கு மாற்றுவது தவறான செயல். நாங்கள் தொடர்ச்சியாக 20 சீட்டு வாங்கி கொண்டு அப்படியே இருக்கப் போவதில்லை. அதைதான் அதிமுகவும் நினைக்கிறது..

தமிழக காவல்துறை சிறந்த காவல்துறை. அனுமதி கொடுத்தால் சிறப்பாக செயல்படும். காவல்துறையை சுதந்திரமாக வேலை செய்ய விடுங்கள்.

எல்லா ரவுடிகளும் திமுகவில்தான் இருக்கிறார்கள். முதலமைச்சர் ரவுடிகளை வைத்துதான் கட்சி நடத்த வேண்டுமா அல்லது தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.