PTR vs Duraimurugan: ’இப்போ தெரியுதா தியாகராஜன்!’ பிடிஆரை கிண்டல் அடித்த துரைமுருகன்! பேரவையில் சிரிப்பலை!
TN Assembly 2024 Live: அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், ’இப்போ தெரியுதா தியாகராஜனுக்கு, நாங்க நிதிகேட்கும்போது எவ்வளோ கஷ்டப்பட்டு இருப்போம்னு’ என கிண்டல் அடித்தார்.

PTR vs Duraimurugan: ’இப்போ தெரியுதா தியாகராஜன்!’ பிடிஆரை கிண்டல் அடித்த துரைமுருகன்! பேரவையில் சிரிப்பலை!
’நாங்கள் நிதி கேட்கும்போது எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்னு இப்போ தெரியுதா தியாகராஜன்’ என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனை குறிப்பிட்டு அமைச்சர் துரைமுருகன் பேசியது பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், இன்றுடன் நிறைவடைகின்றது.